Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் ஏப்ரல் 9 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.

ரிஷபம்

இன்று எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.

மிதுனம்

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.

கடகம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம்.

சிம்மம்

இன்று கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.

கன்னி

இன்று எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

துலாம்

இன்று வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.

விருச்சிகம்

இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடை வெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும்.

மகரம்

இன்று எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.

கும்பம்

இன்று எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவீர்கள். பணவரத்து அதிகப்படும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும்.

மீனம்

இன்று எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்