Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் ஏப்ரல் 6 சனிக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

இன்று கடிதப் போக்குவரத்தால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேச்சை கட்டுப்படுத்தி கருத்து வேற்றுமை வராமல் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் கூறும் கருத்துக்களை கவனமாக கேட்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்க வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் நேசமுடன் பேசுவது அவர்கள் கருத்தை அறிந்து செயல்படுவது நன்மைதரும்.

மிதுனம்

இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியாக பேசுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கடிதப் போக்குவரத்து சாதகமாக பலன் தரும். சகமாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்

இன்று நல்ல சிந்தனை உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்கால திட்டங்களில் கவனம் செலுத்துவதில் முக்கியத்துவம் அளிப்பீர்கள். புத்தி சாதூரியத்தால் காரிய நன்மைகள் உண்டாகும்.

சிம்மம்

இன்று பணவரவு கூடும். பயணங்களால் நன்மை உண்டாகும். வீணான பயஉணர்வு தோன்றும். மனநிம்மதி உண்டாகும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.

கன்னி

இன்று அடுத்தவர் கூறுவதை முழுமையாக நம்பும்முன் யோசிப்பது நல்லது. உழைப்பின் மூலம் தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். தடைபட்ட திட்டங்கள் நிறைவேறும். எதிலும் மெத்தனம், பிடிவாதம் இல்லாமல் இருப்பது நல்லது.

துலாம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் நிதானமான போக்கு காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். ஒருவரது கருத்தை மற்றவர் கேட்பது நல்லது.

விருச்சிகம்

இன்று பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். அவர்களுடன் கேளிக்கை, விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.

தனுசு

இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். வீண் உழைப்பு குறையும். காரிய தடை நீங்கும். எப்போதும் துடிப்பாக சுதந்திரமாக செயல்பட விரும்புவீர்கள்.

மகரம்

இன்று வீண் செலவு ஏற்படலாம். கோபத்தால் வீண் பிரச்சனை ஏற்படும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. காரிய தாமதம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

கும்பம்

இன்று குறிக்கோளற்ற பயணம் செல்ல வேண்டி இருக்கும். விருப்பத்திற்கு மாறாக சில விஷயங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். பார்ட்னர்களிடம் கவனமாக பேசி வியாபாரத்தை கொண்டு செல்வது நல்லது.

மீனம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். குடும்பத்தில் ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முடிவுகள் எடுப்பது நல்லது. பிள்ளைகள் உடல் நலனில் கவனம் தேவை.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்