Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

பைல் படம்.

அனைத்து ராசியினருக்கான இன்றைய நவம்பர் 18, 2023 சனிக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.

ரிஷபம்:

பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் வந்து சேரும். உறவினர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும்.

மிதுனம்:

உங்கள் அன்பை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுவீர்கள். பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம். கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் இனிய சூழ்நிலை நிலவும்.

கடகம்:

நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும்.

சிம்மம்:

விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

கன்னி:

மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருப்பதால் சிறிய பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது., கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது.

துலாம்:

பல தரப்பட்ட மனிதர்களை சந்திப்பதன் மூலம் நீங்களும் பிரபலம் ஆவீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். பணவரத்து சீராக இருக்கும்.

விருச்சிகம்:

தொழில், லாபம் ஆகியவை நன்றாக உள்ளன. பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் வந்து மறையும். கோபத்தில் வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று.

தனுசு:

நன்மைகள் நடக்கும். வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும் அனைவருடனும் அனுசரித்து செல்வீர்கள்.

மகரம்:

வேலை விஷயமாக பயணம் மேற்கொள்வீர்கள். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.

கும்பம்:

உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்கும். தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். சக ஊழியர்களால் அனுகூலம் உண்டு. பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

மீனம்:

முதலீடு இல்லாத புதிய தொழில் தொடங்குவதற்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. அலுவலக கணக்கு வழக்குகளை மிகச்சரியாக கையாளுதல் நல்லது. வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!