Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

horoscope in tamil today-இன்றைய ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் பிப்ரவரி 8 2024 வியாழக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும்.

ரிஷபம்

ஏற்றத்தாழ்வுடையப் பலன்களைப் பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளுக்கு உறவினர்களே தடையாக இருப்பார்கள். நெருங்கியவர்களிடம் வீணான வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ள முடியும்.

கடகம்

சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. கல்வி பயிலுபவர்களும் நல்ல மதிப்பெண்களைப்பெற சற்றே கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம்.

சிம்மம்

பணவிஷயத்தில் மட்டும் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு முன்னேற்றமாக அமையும். எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

கன்னி

பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாகவே அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றிகளைப் பெறமுடியும் என்றாலும் சுபகாரிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.

துலாம்

அரசியல்வாதிகள் தேவையற்ற செலவுகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். கௌரவமான பதவிகள் அமையும்.

விருச்சிகம்

தேவையற்ற பிரச்சினைகள் அனைத்தும் விலகி ஏற்றமான பலனைப் பெறுவீர்கள். எந்தவொரு முயற்சியிலும் சாதகமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத அளவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு உடையவற்றாலும் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் இருந்து வந்த இடையூறுகள் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். சிலர் எதிர்பாராத கௌரவப் பதவிகளையும் பெறுவார்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை நிலவும்.

மகரம்

நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலிலும் நல்ல லாபம் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். மற்றவர்களுக்கு உதவி செய்து மன சந்தோஷத்தை அடைவீர்கள்.

கும்பம்

கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்படையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பாராத பிரச்சினைகள், வம்பு வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும் என்றாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெறுவீர்கள்.

மீனம்

பொருளாதாரநிலையில் தடைகள் நிலவுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பாராத வீண்விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!