Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய அக்டோபர் 5, 2023 வியாழக்கிழமை ராசி பலன்கள்

அக்டோபர் 05, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 18 வியாழக்கிழமை சந்திரன் மிதுன ராசியில் உள்ள மிருகசீரிஷம் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் உள்ள சுவாதி, விசாகம் சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷம்

இன்று தன லாபங்கள் உண்டு. மனக்குறைகள் தீரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் தீரும். வெற்றியைத் தரக்கூடிய நாளாக இருக்கும். மனக்குழப்பங்கள் இருந்தாலும் பெரியளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

ரிஷபம்

கொடுக்கல் வாங்கலில் இருந்த குழப்பங்கள் தீர நண்பர்களின் உதவி கிடைக்கும். கேதுவின் சஞ்சாரத்தால் உங்களுக்கு சில பண கஷ்டங்களோ, நண்பர்களால் மன உளைச்சலோ ஏற்படலாம். மூன்றாம் நபரின் தலையீட்டால் இந்த பிரச்னை தீரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மிதுனம்

உங்கள் ராசியிலேயே சந்திரனின் சஞ்சாரம் செய்வதால் பல குழப்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். மனதில் குழப்பங்களோ, பய உணர்வோ அவ்வப்போது வந்து செல்லும். காலை வேளையில் நல்ல செய்திகள் கிடைக்கும்.

கடகம்

இன்று, விரய செலவுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும். மனக்குறை தீர நண்பர்களின் உதவி கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகளை இன்று தவிர்ப்பது நல்லது. புதிய மனிதர்களின் நட்பு இன்று கிடைக்கும்.

சிம்மம்

இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன அமைதி கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வாக்குவாதங்கள் அதிகரிக்கும். அதனால் பேச்சில் மெளனமாக இருப்பது நல்லது.

கன்னி

இன்று சிறுசிறு குடும்ப பிரச்னைகள் தீரும்.. பல நாட்களாக இருந்து வந்த வழக்குகள், விசாரணைகளில் இழுபறியான சூழல் இருக்கும் என்பதால் மன சஞ்சலம் ஏற்படும்..

துலாம்

இன்று நல்ல மன ஆரோக்கியம் கிடைக்கும். மனபயம் தீரும். இன்று சந்திராஷ்டமம் உங்கள் ராசிக்கு உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம்

இன்று நாள் முழுவதும் உங்களுக்கு உற்சாகம் மிகுந்த நாளாக இருக்கும். நண்பர்கள் மூலம் சிறுசிறு குழப்பங்கள் வந்து செல்லும். பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. உங்களின் நல்ல எண்ணங்கள் நிறைவேறும்.

தனுசு

இன்று மன ஆறுதலும், வெற்றியும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். கணவன் - மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புதிதாக திருமணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். மன மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும்.

மகரம்

இன்று மன நிறைவான நாளாக இருக்கும். பல நாட்களாக இருந்து வந்த குடும்ப பிரச்னைகள் தீரும் நாளாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். தன லாபத்தை கொடுத்தாலும் கூட பெரியளவில் சங்கடம் ஏற்படாது.

கும்பம்

இன்று ஆரோக்கியம் மேம்படும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்னைகள் தீரும். காலை வேளையில் எடுக்கக்கூடிய முடிவுகள் நன்மையைத் தரக்கூடியதாக இருக்கும். நீண்ட தூர பிரயாணங்கள் அனுகூலத்தைத் தரும்.

மீனம்

இன்று மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரக்கூடிய நாளாக இருக்கும். சந்திரன் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் சகோதர, சகோதரிகளிடையே இருக்கும் பிரச்னைகளை தவிர்க்கவும்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil