குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?

குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
X
இந்த குருபெயர்ச்சியில் குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

நிகழும் மங்களகரமான குரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ருது சித்திரை மாதம் 18-ம் நாள் (01.05.2024) அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும், புதன்கிழமையும், திருவோண சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

கன்னி புதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! நீங்கள் புத்திக்கூர்மை கொண்டவர்கள். இந்த பெயர்ச்சியில் குரு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது ராசி ஸ்தானம் - தைரிய ஸ்தானம் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகள் ஐந்தாம் பார்வை உங்கள் ராசியில் பதிவது சிறப்பு. ஏழாம், ஒன்பதாம் பார்வைகள் முறையே மூன்று, ஐந்தாம் இடத்தில் பதிகின்றன. இதனால், ரத்தபந்தங்களிடையே உங்கள் மதிப்பு உயரும், சுபகாரியத் தடைகள் நீங்கும். தொட்டவை துலங்கும். அலுவலகத்தில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பதவி, பொறுப்புகள் மனம்போல் கைகூடும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடிவரும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும்.உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்து சேரும். பழைய கடன்கள் பைசல் ஆகும். பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு சாதகமான சூழல் நிலவும்.

அக்கம் பக்கத்தினரிடம் வீண் உரசல் தவிருங்கள். ஹார்மோன் குறைபாடுகளில் அலட்சியம் வேண்டாம். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சி ஆகும். புதிய முயற்சிகள் ஏற்றத்தைத் தரும். அர்சுவழிப் பாராட்டுகள் சிலருக்குக் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். அரசுப்பணியில் உள்ளவர்கள் நன்மைகள் அதிகரிக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் இரவில் வெகு நேரம் விழித்திருப்பதைத் தவிருங்கள். கலைஞர்கள், சினிமாத்துறையினர் கணிசமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். செல்லும் இடத்தின் சட்டங்களை மதியுங்கள். வாகனத்தில் வேகம் வேண்டாம். தலை, முதுகு, கழிவு உறுப்பு, ரத்தத் தொற்று உபாதைகள் வரலாம். நரசிம்மர், பைரவர் வழிபாடு நன்மைகள் பல சேர்க்கும்.


நட்சத்திர பலன்கள்

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:

இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.

அஸ்தம்:

இந்த பெயர்ச்சியால் திடீர் செலவு உண்டாகலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவது உங்களுக்கு மனநிம்மதி ஏற்படுத்தித் தரும். பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கவுரவம் அதிகரிக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். சகவியாபாரிகளுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் வழி கிடைக்கும். உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.

சித்திரை - 1, 2 பாதங்கள்:

இந்த குரு பெயர்ச்சியால் வீட்டைவிட்டு வெளியே தங்கநேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்திசாதூர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். நஷ்டம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. உங்கள் சமயோஜித புத்திக் கூர்மையால் திடீரென்று வரும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. ஆனாலும் பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பது அவசியம். எல்லாகாரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்