ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச மூலிகை நீர்மோர்
ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவச மூலிகை நீர்மோர் வழங்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்றும் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என்றும் போற்றப்படுகிறது ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில். இக்கோவிலுக்கு ஆண்டு முழுவதும் திருவிழா நாட்கள் என கருதும் வகையில் பக்தர்கள் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அரங்கனின் அருளை பெறுவதற்காக வருகிறார்கள்.
தற்போது கோடை வெப்பம் தொடங்கியதை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் சிரமம்மின்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வருடமே இனி வருடம் தோறும் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பக்தர்களை காக்கும் பொருட்டு அவர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்லமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த உத்தரவின் அடிப்படையிலும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவுரையின் படியும் இந்த ஆண்டு இன்று 21.02.2023 செவ்வாய்க் கிழமை காலை 11.00 முதல் துரை பிரகாரத்தில் கட்டணம் மில்லா வரிசையிலும், கொடி மரம் அருகில் கட்டண தரிசன வரிசையிலும் ஆக சுமார் 5000 பக்தர்களுக்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் (இஞ்சி, கறிவேப்பில்லை , கொத்தமல்லி , பச்சைமிளகாய் ,பெருங்காயம் , உப்பு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது ) கோடை காலம் முழுவதும் வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதனை இன்று கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார். உடன் கண்காணிப்பாளர் கோபலகிருஷ்ணன் , உதவி மேலாளர் சண்முகவடிவு, அர்ச்சகர் சுந்தர்பட்டர் கோடை காலம் முழுவதும் உபயமாக மூலிகை நீர் மோர் வழங்கும் திருச்சி வேதா பால் நிறுவனர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu