சபரிமலையில் 10 நாட்களில் 52 கோடி வருமானம்: தேவசம் போர்டு அறிவிப்பு
பைல் படம்
மண்டல காலம் தொடங்கி, 10 நாட்களில் சபரிமலை வருமானம் 52 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. திருவிதாங்கூர் தேவேசம் போர்டு அறிவிப்பு
கேரள மாநிலம் மற்றும் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோவில். இந்தக் கோவிலுக்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து பக்தர்கள் கடுமையான விரதங்கள் மேற்கொண்டு சபரிமலை ஐயப்ப சுவாமி தரிசிக்க வருகின்றனர். கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு நடைபெறும் விழாக்களில் மண்டல பூஜை மற்றும் மகரஜோதி பூஜை ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்ற பூஜை ஆகும். தற்போது மண்டல பூஜைக்காக கோவில் நடைகள் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இங்கு வரும் மக்களின் தேவைக்காக அறைகள், கோயில் பிரசாதம் என பல்வேறு நடவடிக்கைகளை திருவாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது. சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக பல்வேறு இடங்களில் அன்னதானமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன் நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் சந்நிதானத்தில் கூறியதாவது: மண்டல காலம் தொடங்கி 10 நாட்களில் அனைத்தும் சுமூகமாக நடக்கிறது. பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்த வருமானம் 52.55 கோடி ரூபாயாகும். இதில் அரவணை விற்பனை ரூ. 23.58 கோடி. காணிக்கை ரூ.12.74 கோடி. அப்பம் விற்பனையில் ரூ.2.58 கோடியும், அறை வாடகையாக ரூ.49 லட்சமும் கிடைத்துள்ளது. இதில் பெரும் பகுதி திருவிழா நிர்வாகத்துக்காக செலவு செய்யப்படுகிறது. அடுத்த 20 நாட்கள் தேவைக்காக 51 லட்சம் டின் அரவணை ஸ்டாக் உள்ளது. தினமும் சராசரியாக இரண்டரை லட்சம் டின் அரவணை விற்பனையாகிறது.
பக்தர்களுக்கு எந்த குறையும் வராத அளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் வசதிகள் சிறப்பாக செயல்படுகின்றன. நீலிமலை பாதையில் உள்ள பணிகள் அடுத்த வாரம் நிறைவு பெறும். சன்னிதானம், பம்பை, நிலக்கல்லில் மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu