அன்னூர் ஐயப்பன் திருக்கோவில் 52ம் ஆண்டு விழா துவக்கம்

அன்னூர் ஐயப்பன் திருக்கோவில் 52ம் ஆண்டு விழா துவக்கம்
X
அவினாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அன்னுார், ஸ்ரீஐயப்பன் திருக்கோவில், 52ம் ஆண்டு துவங்கியது.

அவிநாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, அன்னுார், ஸ்ரீஐயப்பன் திருக்கோவில், 52ம் ஆண்டு திருவிழா, வாஸ்து பூஜையுடன் துவங்குகியது. இன்று (16ம் தேதி) காலை, 6:00 மணிக்கு கொடியேற்றம், வேள்வி பூஜையுடன் இது தொடங்கியுள்ளது.

நாளை (17ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு கலச தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் வேள்வி பூஜை நடக்கிறது. 18ம் தேதி, அதிகாலையில், மகா கணபதி ஹோமம், ஐயப்பனுக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், மதியம் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

வரும், 19ம் தேதி காலை, 11:30 மணிக்கு, யானை, குதிரை, செண்டை மேளத்துடன், புலி வாகனத்தில், ஐயப்ப சுவாமி வீதி உலா, முக்கிய வீதிகள் வழியாக நடக்கிறது. ஏற்பாடுகளை, ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா