பிரசித்தி பெற்ற திருநெல்வேலி சந்திப்பிள்ளையார் கோவில் சாயரட்சை பூஜை
திருநெல்வேலி டவுண் மேற்கு ரத வீதியில் பழைமைவாய்ந்த சந்திப் பிள்ளையார் கோயில் உள்ளது. அகத்திய முனிவரால் பிரதிஷ்டை பெற்ற இக்கோயில் சந்திவிநாயகர் இரட்டை மணிமாலை, நெல்லை சந்திவிநாயகர் பதிகம் மற்றும் கீர்த்தனை நூல்களில் பாடப்பட்டுள்ளன. தினமும் 5 கால பூஜை நடைபெறும். இதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது சாயரட்சை பூஜை ஆகும். இதனை காண பக்தர்கள் அதிகம் கூடுவது வழக்கம்.
அகத்திய முனிவரால் பிரதிஷ்டை பெற்ற திருநெல்வேலி பழைமைவாய்ந்த சந்திப் பிள்ளையார் கோயில் சாயரட்சை பூஜையில் தினமும் குவியும் பக்தர்கள்
அதாவது கோவில்களில் நடைபெறும் ஆறு கால பூஜை களாவன,.
உசக்கால பூஜை
காலசந்தி பூஜை
உச்சிக்கால பூஜை
சாயரட்சை பூஜை
சாயரட்சை இரண்டாம் கால பூஜை
அர்த்தசாம பூஜை
இதில் சாயரட்சை பூஜையானது சூரியனின் மறைவுக்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். விநாயகர் பூஜை ,மூலவரான லிங்கத்திற்கு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபம், நைவேத்தியம் படைக்கப்படுகிறது. தொடர்ந்து சாயரட்சை இரண்டாம் கால பூஜை என்பது விநாயகர் பூஜை , மூலவருக்கு அபிஷேக ஆராதனை, தீபம், நைவேத்திய படையல் பூஜை செய்யப்படுகிறது.
பின்பு பரிவார தெய்வங்கள், நித்யாக்னி கார்யம், நித்யோத்சவ பலி ஆகிய பூஜை நடைபெற்று சண்டேசுவர பூசையுடன் இரண்டாம் கால பூஜை முடிவடைகிறது.
திருநெல்வேலி சந்திப்பிள்ளையார் திருக்கோவில். இந்த கோவிலில் உள்ள விநாயகரை முற்காலத்தில் தமிழ் முனிவரான அகத்தியர் பிரதிஷ்டை செய்து வணங்கியதாக வரலாறு கூறப்படுகிறது. இந்த கோவிலில் அகத்திய பெருமானுக்கும் சந்நிதி அமையப்பெற்றுள்ளது.
இங்கு தினந்தோறும் நடைபெறும் சாயரட்சை கால பூஜையின் போது அகத்திய முனிவர் அரூபமாக கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. எனவே இந்த கோவிலில் நடைபெறும் சாயரட்சை பூஜையை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது சிறப்பம்சம் ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu