உடல் ஆரோக்யம், கல்வியை மேம்படுத்தும் கிழக்கு வாசல் கொண்ட வீட்டின் வாஸ்து பலன்
East Facing House Vastu in Tamil - மனிதர்களுக்கு பிரச்னையின்றி வாழ வேண்டுமாயின் உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை இம்மூன்றும் அடிப்படை காரணகளாக உள்ளது.இவை மூன்றும்இருந்தாலே வாழ்க்கையில் பாதி பிரச்னை கழிந்தது மாதிரிதான்.
கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார் என அக்காலத்தில் பெரியவர்கள் சொன்ன நோக்கத்தினை இன்று பலர் அனுபவத்தின் வாயிலாக அறிந்து வருகின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. காரணம் இரண்டிலும் அவ்வளவு பிரச்னைகள் பொறுப்புகள் உள்ளது. ஒரு காலியிடம் வாங்க வேண்டுமாயின் என்னென்ன பார்க்கவேண்டும்... என்னென்ன செய்யவேண்டும் அ தனையே வீடாக கட்டினால் எவ்வளவு பிரச்னைகள் என அதனுள் நுழையும்போதுதான் தெரிகிறது. இதனை வைத்துதான் அக்காலத்தில் பெரியவர்கள் சொன்னது நிஜமாகிறது.
திசைகள் நான்கு இருந்தாலும் அதில் கிழக்குக்கு அதிக ஆஃபர்கள் உண்டு. காரணம் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என வைத்துக்கொள்ளலாம். கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும்தெற்கு என நான்கு திசைகள் இருந்தாலும் முதல் திசையான கிழக்குக்கே அதிக முக்கியத்துவம் சமுதாயத்தில் தரப்படுகிறது என்பதை அனைவரும் அறிவீர்கள்.
காரணம் சூரியன் உலகிற்கே பகலில் ஒளி வெள்ளத்தை தரக்கூடிய சக்தி கொண்டவன். எல்லா கலாச்சாரங்களிலும் தெய்வீகத்தன்மை நிறைந்தவனாகிறான் சூரியன். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் அனைத்துமே கிழக்கு திசை நோக்கியே கோபுரம் இருக்கும்.
கிழக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?
வாஸ்து சாஸ்திரத்தில் ஏன் கிழக்குக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது?. சூரியன் தந்தைக்கு காரகனாக விளங்குவதால் கிழக்கு திசை நோக்கிய வீட்டில் வசிப்பவர்களின் தந்தைக்கு உடல்நலம் நல்ல நிலையில் இருக்கும். மேலும் வீட்டில் உள்ள மற்றவர்களின் உடல் நலனும் எந்த பாதிப்பும்இல்லாமல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
சிம்ம்ம, மேஷம் ராசியில் பிறந்தவர்கள் கிழக்கு வாசல் கொண்ட வீடுகளில் வசித்தால் சிவபெருமானுடைய நல்லருள் முழுமையாக கிடைக்கும். மேலும் இந்த கிழக்கு வாசல் வைத்த வீடுகளில் வசிப்பவர்களின் குழந்தைகள் சூரிய பகவானின் அருளால் கல்வியில் பெறத்தக்க முன்னேற்றத்தை அடைவார்கள்.
சரிங்க...எல்லோருக்கும் கிழக்கு திசை வாசல் கொண்ட வீடே அமையுமா? மற்ற வாசல் கொண்ட வீடுகளில் இருக்கும் குழந்தைகளின் படிப்பு என்னாவது ? என கேட்கிறீர்களா? இதோ அதற்குபதில் .வேறு திசை நோக்கிய வாசல்கொண்டவீடுகளில் வசிப்பவர்களுடைய குழந்தைகளை கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து படிக்கும் சூழ்நிலையை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமை.
அரசு பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இ துபோன்ற கிழக்கு வாசல் கொண்ட வீடுகளில் வசித்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் கிட்டும். தன்னுடைய சுய ஜாதகத்தில் சூ ரியன் நீச்சமடைந்திருக்கும் பட்சத்தில் இவர்கள் கிழக்கு பார்த்த வாசலில் உள்ள வீடுகளை தவிர்ப்பது நல்லதாகும். இதனை தவிர்த்து இவர்கள் அனைவருமே தெற்கு அல்லது வடக்கு பார்த்த வாசல் கொண்ட வீடுகளில் வசிக்க வேண்டும்.
தீராத நோய் பாதிப்பால் பல நாட்கள் படுத்த படுக்கையாய் இருப்பவர்கள் கூட கிழக்கு பார்த்த வாசல் கொண்ட வீடுகளில் வசித்தால் நோய்கள் நீங்கி உடல் நலம் மேம்படும்.கிழக்கு பார்த்த வாசல் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். காரணம் சூரியன் உதிப்பது கிழக்கு. அவன் உதித்த பின் சூரிய ஒளியானது உங்கள் வாசலில்தான்முதலில் வரும். இதுவே பெரும் கடாட்சம் ஆகும். மேலும் நமக்கு மென்மேலும் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் திசை கிழக்கு. பெரியவர்களின் ஆசி மற்றும் கடவுளின் அருள் ஆகியவைகள் அதிகம் கிடைக்கும். ஏற்கனவே இருக்கும் வீடு வாஸ்து முறைப்படி கட்டாவிட்டாலும் கூட வாசல் கிழக்கு நோக்கி இருப்பதால் அதிக சிக்கல் இருக்காது.
எனவே திசைகளில் முதன்மையானவன் கிழக்கு. அதேபோல் பலன்களை அதிகம் அள்ளித்தருவதிலும் கிழக்கு பிரதான இடத்தினை வகிக்கிறது. இன்றளவில் மற்ற திசைகளை காட்டிலும் கிழக்கு திசை கொண்ட வீடு மனை உள்ளிட்டவைகளின் விலையும் சற்று கூடுதலாக நிர்ணயம் செய்வதற்கு இதுதான் காரணமோ? எனவும் எண்ணத்தகுந்த வகையில் கிழக்கு... தன்னுடைய பிரதான இடமான முதலிடத்தினையே அனைத்திலும் தக்க வைத்துள்ளது. எனவே கிழக்கு பார்த்த வீடுகளில் வசிப்போருக்கு ஆயுளும்,. ஆரோக்யமும், அதிர்ஷ்டங்களும் அதிகம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமுங்கோ.,
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu