தனிஷ்டா நட்சத்திரங்களின் சிறப்புகள் பற்றி தெரியுமா?

Dhanishta Nakshatra in Tamil

Dhanishta Nakshatra in Tamil

Dhanishta Nakshatra in Tamil-மொத்தம் உள்ள நட்சத்திரங்கள் 27. அதில் 13 நட்சத்திரங்கள் தனிஷ்டா நட்சத்திரங்களாகும்.மீதி 14 நல்ல நட்சத்திரங்களாக கருதப்படுகின்றன. மனிதர்களின்இறப்பின்போது 13 நட்சத்திரத்தில் இறந்தால் அதற்குரிய பரிகாரங்களை செய்யவேண்டுமாம். தெரியுமா?


Dhanishta Nakshatra in Tamil-மனித பிறப்பு என்பது மகத்தானது. ஆனால் மனிதர்களாக பிறந்தவர்கள் வாழும் காலத்தில் பல இன்னல்களை அனுபவித்துவிட்டு இறக்கின்றனர்.அந்த இறப்பிலும் துன்பம் அனுபவிக்கும் நட்சத்திரங்களாக கருதப்படுபவைதான்இந்த தனிஷ்டா நட்சத்திரம்.

நம்முடைய இறப்பு என்பது ஒரு சிலருக்கு வயது மூப்பால் ஏற்படலாம். ஒரு சிலருக்கு இயற்கையானமரணம் வரும் .ஆனால் ஒரு சிலருக்குஇந்த மரணமானது நோய்களால் ஏற்படும். ஒரு சிலரோ விபத்துகளினால் அகால மரணத்தினை அடைவதும் உண்டு.

மனிதர்கள் இறந்த பின்னர் அவர் வாழும் காலங்களில்செய்த நன்மை, தீமைகளுக்கு தகுந்தவாறு சொர்க்கம் மற்றும்நரகத்திற்கு செல்வார்கள் என சொல்லப்படுவது ஐதீகம். ஆனால் ஒருசிலர் இறைவனின் பாதத்தினை அடைந்து முக்தி அடைவர் எனவும், ஒரு சிலர் அவர் வாழ்நாளில் செய்த பாவத்திற்கு தகுந்தாற்போல் நரகத்திற்கு செல்வர் எனவும் சொல்லப்படுவதுண்டு.

அதேபோல் ஒருவர் பிறக்கும்போது நட்சத்திரத்தினை கணக்கில் எடுத்துக்கொள்வர். இறக்கும்போது திதியை குறித்து அதன்படி வருட தெவசங்கள் நடத்தப்படுவதுண்டு. ஆனால் இறப்பிலும் நட்சத்திரத்தினை கவனிக்க வேண்டும் எனசித்தர்கள்தெரிவித்துள்ளனர். தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணமடைந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள்

அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ரோகிணி,கார்த்திகை, உத்திரம்,மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய தனிஷ்டாபஞ்சமி ஆகியவை தனிஷ்டா நட்சத்திரங்கள் ஆகும். மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் மீதியுள்ள 14 நட்சத்திரத்தில் இறந்தவர்களுக்கு எந்த வித பிரச்னைகளும் இல்லை. ஆனால் தனிஷ்ட பஞ்சமி நட்சத்திரத்தில் இறந்தவர்களுக்கு மட்டும் எமலோகம் செல்ல கால அவகாசம் தேவைப்படுவதால் இதனை அடைப்பு என்று சொல்கின்றனர். கருடபுராணமும் இதனை உறுதிப்படுத்துகிறது. தனிஷ்டா பஞ்சமி ஒரு துர்தேவதையாக சொல்லப்பட்டுள்ளதால் அடைப்பு நட்சத்திரத்தில் இறந்தவர்கள் வீட்டில் முறைப்படி பரிகாரங்களை செய்வது அவசியம் ஆகும்.

அப்படி முறைப்படி பரிகாரம் செய்யாத பட்சத்தில் துர்தேவதைகளால் பலபிரச்னைகள் ஏற்படுவதோடு 6 மாத காலத்திற்குள் மற்றொரு மரணத்தினை சந்திக்க நேரிடும் சூழ்நிலை உருவாக காரணமாகிவிடும் என்கின்றனர்.

அக்காலத்தில் அடைப்பு நட்சத்திரத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருந்ததும் உண்டு. ஒரு சிலர் இறந்தவரை வாசல் வழியாக எடுத்துசெல்லாமல் சடலத்தினை சுவரை இடித்து அதன் வழியாக எடுத்து செல்லுதல் போன்ற கடுமையான விதிமுறைகளை அக்காலத்தில் கடைப்பிடித்ததும் உண்டு.

முக்தியடைந்த உயிர்கள் வைகுண்டம் செல்பவர்கள் மரணத்திற்குப் பிறகு முக்தி பெற்றவர்கள் கபாலம் மூலம் உயிர் பிரிந்து சூரியன் வழியாக இறைவனின் பாதங்களை அடைகின்றன. இதனைத்தான் கயிலாய பிராப்தி, வைகுண்ட பிராப்தி என்பார்கள். முக்தி நிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன. மன்னிக்கத் தகுந்த, மிகக் கொடிய பாவங்களைச் செய்யாதவர்களின் உயிர்கள் யம தூதர்களால் நேரடியாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

பூமிக்கும் எமலோகத்திற்கும் இடையே 27 நட்சத்திரங்களின் வழியாகச் செல்லும் 27 பாதைகள் உள்ளன. இதில் அடைப்பு ஏற்படுத்தும் 13 நட்சத்திரங்களின் பாதைகளைத் தவிர மற்ற 14 நட்சத்திரங்களின் வழியாகச் செல்பவர்கள் விரைவாக எமப்பட்டினத்தை அடைந்து விடுவார்கள்.

எமலோகத்திற்கு தாமதம்

இறந்தவர்களுக்கு பிண்டம் எமலோகத்தில் கணக்கு அங்கு எமன் அவ்வுயிர்களுக்கு சித்திரகுப்தன் மூலம் பாவ, புண்ணியங்களை கணக்கு பார்த்து அவற்றைப்பற்றி பற்றி உபதேசித்து பிறகு யம தூதர்களை அழைத்து மீண்டும் கொண்டு போய் அவர்கள் உடலிருக்கும் இடத்தில் விடச் சொல்லுவார். உடலானது மாந்தியால் சவமாக மாற்றப்பட்டு விடும். அங்கு வந்து சேரும் உயிரானது தங்கள் உறவினர்கள் அந்த உடலுக்கு நடக்கும் சடங்குகளையும் பார்த்துக் கொண்டே இருக்கும். பிள்ளைகள் 12 தினங்களுக்கு அன்புடன் தரும் பிண்டங்களை ஏற்றுக் கொண்டேயிருக்கும். அதற்குப் பிறகு மீண்டும் அவ்வுயிரை யமதூதர்கள் கவர்ந்து சென்று எமனின் முன் நிறுத்துவார்கள். அங்கு அவர்களின் மறுபிறவி பற்றி தீர்மானிக்கப்பட்டு, அவ்வுயிர்கள் சந்திர மண்டலத்திற்கு வரும். எமலோகம் செல்ல தடை தடையான நட்சத்திரங்கள் அடைப்பு ஏற்படுத்தும் 13 நட்சத்திரங்களின் வழியாக எமப்பட்டினம் செல்ல தூரமும், காலமும் அதிகமாகும். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல ஆறு மாதங்கள் அதிகமாகும். ரோகிணி வழியாகச் செல்ல நான்கு மாதங்கள் அதிகமாகும். கார்த்திகை, உத்திரம் என்ற இரண்டு நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல மூன்று மாதங்கள் அதிகமாகும். மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல இரண்டு மாதங்கள் அதிகமாகும்

இறப்பதே தண்டனை

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரத்தில் இறப்பதே தண்டனையாக அமைகிறது. இவ்வுயிர்கள் எமலோகம் செல்வதற்கு முன் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு ஸ்தூல சரீரம் வழங்கப்படும். அந்த உடம்பை பெற்ற தனிஷ்டா பஞ்சமி உயிர்கள் நாள் ஒன்றுக்கு நூற்றுக் கணக்கான காத தூரம் கல்லிலும், முள்ளிலும், காட்டுப் பாதையிலும் நடந்து செல்ல வேண்டும். அவை உடம்பை ரணமாக்கி விடும். தண்ணீரும், உணவும் கிடைக்காது. வெளிச்சமே இருக்காது. இதனால்தான் அடைப்பு காலங்கள் முழுவதும் தினந்தோறும் உணவும், தண்ணீரும், விளக்கும் வைத்து கற்பூரம் ஏற்றி, அவை அந்த உயிர்களைப் போய்ச் சேர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறார்கள்.

பிண்டங்கள்

பிண்டங்களைத் தட்டிப் பறிக்க தலைக்கு மேல் பைசாசங்கள் வேறு பறந்து கொண்டேயிருக்கும். நடக்க முடியாமல் துன்பப்படும் பொழுது கூட யம கிங்கரர்கள் அடித்து, உதைத்து நடக்க வைப்பார்கள். என்ன பாவம் செய்ததற்காக இப்படி உன்னைத் துன்புறுத்துகிறோம் என்று சொல்லிச் சொல்லி அடிப்பார்கள் என்று சொல்லப்படுவதும் உண்டு.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story