திருத்தணி முருகர் கோவிலில் இன்று முதல் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி

திருத்தணி முருகர் கோவிலில் இன்று முதல் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி
X
ஐந்து நாட்கள் தடைக்கு பிறகு முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் திருத்தணி முருகர் கோவிலில் இன்று முதல் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் தடைக்கு பிறகு முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் திருத்தணி முருகர் கோவிலில் இன்று முதல் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பெற்ற ஆடிக்கிருத்திகை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து காவடிகள் செலுத்துவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவும் என்பதால், கடந்த ஐந்து நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று முதல் மீண்டும் மலைக் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை பூஜைகள் தொடர்ந்து பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றியும் முருகப் பெருமானை தரிசித்து வருகின்றனர்.

ஆடிக்கிருத்திகை விழாவின் போது முருகப் பெருமானை தரிசிக்க அனுமதி நிராகரிக்கப்பட்ட நிலையில் ஐந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இருப்பினும், திருக்கோயில் மீண்டும் திறப்பு தொடர்பாக பக்தர்களுக்கு முழுமையான அறிவிப்பு இல்லாததால் குறைந்த அளவில் மட்டுமே பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

மலைக் கோயிலுக்கு குறைந்த அளவில் பக்தர்கள் மட்டுமே வருகைப் தருவதால் குறைந்த நேரத்தில் முருகப்பெருமானைத் தரிசித்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!