/* */

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி

சித்திரை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி, மே- 1ம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி
X

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு மாதப் பிரதோஷம் அமாவாசை பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், சித்திரை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை நாளை முன்னிட்டு, இன்று முதல் மே- 1ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல், மதியம் 11 மணி வரை மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது வெளியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலையில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 April 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  2. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  3. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  4. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  6. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  7. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  9. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  10. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!