திருப்பதி ஏழுமலையானுக்கு தங்க சூரிய கடாரி காணிக்கை செலுத்திய பக்தர்
திருப்பதி ஏழுமலையானுக்கு தங்க சூரிய கடாரி
திருப்பதி ஏழுமலையானுக்கு ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ரூ 1 கோடி மதிப்பிலான தங்க சூரிய கடாரி (கத்தி) காணிக்கை செலுத்தினார்.
ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் மூலவர் வெங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் பத்மாவதி அம்மையார் ஆவார். வெங்கடாத்ரி மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் கொண்டதாகும். இத்தலத்தில் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த எம்.எஸ்.பிரசாத் என்னும் பக்தர் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ .1. 08 கோடி மதிப்புள்ள தங்க சூரிய கடாரி ( கத்தி) யை தயார் செய்துள்ளார்.
கோவையை சேர்ந்த நிபுணர்களைக் கொண்டு ஆறு மாத காலமாக 6.5 கிலோ எடையுள்ள இந்த சூரிய கடாரி தயாரிக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு வந்த எம்.எஸ். பிரசாத் குடும்பத்தினர் இன்று காலை தங்க சூரிய கடாரியை செயல் அதிகாரியிடம் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu