கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை சொல்வோம்...! தேவனின் அன்பை பகிர்வோம்...!
Christmas Wishes in Tamil
Christmas Wishes in Tamil-ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இயேசுவின் பிறந்தநாள் தான் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் டிசம்பர் மாதம், மக்கள் கிறிஸ்துமஸை கொண்டாட தயாராகி விடுவார்கள். குறிப்பாக கிறிஸ்துமஸ் துவங்கி புத்தாண்டு வரை முழுவதுமாக கொண்டாட்டம் தான். கிறிஸ்துமஸ் தினத்தில் கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்வார்கள். அன்றைய நாளில் கிறிஸ்துமஸ் மரம், அலங்கார மின் விளக்குகள், ஸ்டார்கள், சான்டாகிளாஸ் என அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா போன்றவை மிகவும் பிரபலமானது.
இந்த நன்நாளில் நண்பர்கள், உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளவேண்டும். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சில வாரங்களுக்கு முன்னரே தொடங்கி, புத்தாண்டு வரை நீடிக்கும். பார்ட்டி அலங்காரங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் என, ஊரே களைகட்டும்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, சிகப்பு நிற வெல்வெட் அங்கி ,சிரித்த முகத்துடன் இருக்கும் 'சாண்டா கிளாஸ் தாத்தா' மற்றும் ஏசுநாதர் உயிர்ப்பின் அடையாளமாக பார்க்கப்படும் 'ஓக் மரம்' ஆகிய இரண்டும் முக்கிய அங்கங்களாக உள்ளன.
இனி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வோம்.
மண்ணில் பிறந்த இறை பாலகன் உங்களை வெற்றிகளை நோக்கி வழி நடத்துவாராக - கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
Merry Chirstmas
மக்களோடு மக்களாய் இருக்கும் இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடிடுவோம்...
துன்பங்களை களைந்துவிட்டு துயரங்களை தகர்த்துவிட விடியலென வந்துவிட்டார் விண்ணுலக தேவனவர்
அன்று ஆயர்கள் கேட்ட நற்செய்தியை இன்று நாமும் கேட்போமா? இயேசு நமக்காய் பிறந்தாரென...
உலகில் உள்ள எல்லா நன்மைகளையும் கடவுள் உங்களுக்கு பொழிவார். நீங்கள் கனவு கண்ட அனைத்தையும் நீங்கள் ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
நீங்கள் என் நண்பராக இருப்பது ஒவ்வொரு நாளும் கிறிஸ்துமஸ் போல எனக்குத் தோன்றுகிறது. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
இந்த கிறிஸ்துமஸில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்
மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மேரி கிறிஸ்துமஸ்
உங்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட என்னால் முடியாமல் போகலாம்; ஆனால் நான் எப்போதும் அதை உங்களுடன் இதயத்துடன் கொண்டாடுவேன்.
மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தொலைவில் உள்ள அன்பர்களே, உங்களிடம் பாதுகாப்பான மற்றும் அற்புதமான கிறித்துமஸ் இருப்பதாக நம்புகிறேன். நல்வாழ்த்துக்கள்!
உங்களுக்கு மகிழ்ச்சி, நம்பிக்கை, அமைதி மற்றும் நிறைய கிறிஸ்துமஸ் இன்னபிற வாழ்த்துக்கள். கிறித்துமஸ் வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இயேசு கிறிஸ்து பிறந்து, உலகில் உள்ள மக்களின் பாவத்தை ஏற்று, ரட்சிக்கப் பிறந்தவர்.
அன்று ஆயர்க கேட்ட ஆச்சர்ய நற்செய்தியை இன்று நாமும் கேட்போமா.. இயேசு நமக்காய் பிறந்தாரென.
மன்னிப்பை மக்களுக்கு அருளிய மகா கடவுள் பிறந்த தினம், மக்களின் துன்பம் மறைந்த தினம், மகிழ்ச்சி நிறைந்த தினம் தான் கிறிஸ்து பிறந்த தினம்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu