சித்ரா பவுர்ணமி வழிபாடு-நிலவொளியில் இருந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும்

விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு வழிபாடு செய்யும் வழக்கம் காலம் காலமாக இருக்கிறது. சித்திரை மாதத்தில் சூரியனின் வெம்மை பகலில் மிகவும் கடுமையாக இருக்கும். அதனால் மக்கள் ஒன்று கூடி, கோடை காலம் முடிந்த பின் போதுமான மழை பெய்ய வேண்டி தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதற்கு ஒரு இரவு நேரத்தை தேர்ந்தெடுத்தனர். அந்த இரவில் வெளிச்சம் வேண்டும் என்பதால், முழுநிலவு நாளான சித்ரா பவுர்ணமியைத் தேர்ந்தெடுத்தனர். சித்ரா பவுர்ணமியன்று மட்டுமே நிலா தன் 16 கலைகளையும் பொழியும். இதில் அமிர்தம் இருப்பதாக ஐதீகம்.
இந்நாளில் நிலவொளியில் இருந்தால் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஜோதிட ரீதியாகவும் இதற்கு ஒரு காரணம் உண்டு. சூரியன், சந்திரன் இருவரும் ஒருவருக்கொருவர் நேராக ஏழாம் பார்வையாக பவுர்ணமியன்று பார்த்துக் கொள்வர். அப்போது சந்திரனை வழிபட்டால் ஆரோக்கியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
இதனால் தான் பவுர்ணமி விரதம் இருப்பவர்களின் பிரச்னைகள் சீக்கிரம் தீர்ந்து விடும் என்பர். திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர் உள்ளிட்ட மலைக்கோவில்களில் கிரிவலம் வருவதும் மனபலத்தை அதிகரிக்கத் தான். மதுரையில் அழகர் சித்ரா பவுர்ணமியன்று சூரிய உதயத்திற்கு முன்பாகவே வைகையில் இறங்கி விடுவார். ஒரு காலத்தில் சித்ரா பவுர்ணமியன்று இரவில் சித்ரான்னங்களுடன் ஆற்றங்கரைகளுக்கு புதுமணமக்களும், முறைப்பெண், முறை மாப்பிள்ளைகளும் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu