/* */

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திருவாடானை அருகே திருவெற்றியூரில் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

HIGHLIGHTS

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
X

திருவாடானை அருகே திருவொற்றியூரில் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாடானை அருகே திருவொற்றியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கொடியேற்றம் இன்று நடைபெற்றது. முன்னதாக புதன்கிழமை மாலை அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் இன்று காலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாள் இரவும் கேடகம் பல்லக்குபூதம் அன்னம் நந்தி சிம்மம் வெட்டும் குதிரை காமதேனு ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 15 ஆம் தேதி வெள்ளிகிழமை நடைபெறும். இதில் சரக மேலாளர் இளங்கோ, தேவஸ்தான சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார், கௌரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 7 April 2022 6:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  4. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  5. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  6. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  7. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...
  9. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  10. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!