மங்கல வாழ்வு பெற மகா கணபதி மந்திரம் சொல்லுங்க!..

Ganesh Puja Mantra in Tamil
X

Ganesh Puja Mantra in Tamil

Ganesh Puja Mantra in Tamil-மகா கணபதி மந்திரத்தைச் சொல்லி வந்தால், நம் விக்னங்களையெல்லாம் அகற்றியருள்வார் பிள்ளையார்

Ganesh Puja Mantra in Tamil-முழுமுதற் கடவுள் என விநாயகரை கொண்டாடுகிறது புராணமும் சாஸ்திரமும். கணபதியைப் போற்றுகிறது தர்ம சாஸ்திரம். எந்த பூஜையைச் செய்தாலும் முதல் வணக்கம், முதல்வனான, முழுமுதற்கடவுளான பிள்ளையாருக்கு செய்யப்படுகிறது. ஹோமம் முதலான சடங்குகளிலும் பிள்ளையாருக்கு முதல் பூஜையைச் செய்துவிட்டுத்தான், அடுத்தடுத்த சடங்குகளை செய்வது வழக்கம்.

எதிலும் பிள்ளையாருக்கு முதல் பூஜை, வழிபாடு என இருந்தாலும், பிள்ளையார் மட்டும்தான் நம் எப்படி பூஜை செய்தாலும் ஏற்றுக் கொள்வார். நாம் எந்தவிதமாக விநாயகரை வழிபட்டாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அருளை வழங்குபவர் பிள்ளையார்.

ஈரமான நிலத்தில் விளையும் அருகம்புல்லோ, வறண்ட பூமியில் விளையும் எருக்கம்பூவோ எதுவாக இருந்தாலும், ஏற்றுக் கொள்பவர் விநாயகர்.

கணபதியை, தொந்தி கணபதி, ஆனைமுகத்தான், பிள்ளையாரப்பா என்றெல்லாம் உரிமையாக அழைத்து நம் வேண்டுதலை வைக்கிறோம்.

ஆனாலும் மகா கணபதி மந்திரத்தைச் சொல்லி வந்தால், நம் விக்னங்களையெல்லாம் அகற்றியருள்வார் பிள்ளையார்.

மகா கணபதி மந்திரத்தை, எந்த நாளில் வேண்டுமானாலும் சொல்லலாம். எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்..

அப்போது, பிள்ளையாரை நினைத்து, அவரை ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டு, மகா கணபதி மந்திரத்தை 11 முறை, 24 முறை, 54 முறை, 108 முறை என உச்சாடனம் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.

சக்தி மிக்க மகா கணபதி மந்திரம் இதுதான் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்

கணபதயே வர வரத சர்வஜனம் மே

வசமானய ஸ்வாஹா.

விநாயகரை வழிபடும் பொழுது உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், ஸ்லோகங்கள், இந்தப் பதிவில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை விநாயகர் சதுர்த்தி அன்று பூஜைகள் செய்யும் பொழுது உச்சரித்தால் சகல சம்பத்துகளும் கிட்டும் என்பது ஐதீகம். இவற்றை தினம்தோறும் கூறி வழிபட்டு விநாயகரின் அருளைப் பெற்றுக் கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

விநாயகர் மூல மந்திரம்: ஓம் கம் கணபதயே நம

விநாயகர் காயத்ரி மந்திரம்:

வக்ரதுண்டாய ஹீம் ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

விநாயகர் சகஸ்ரநாமம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே!

விநாயகர் ஸ்லோகம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

கணபதி ஸ்லோகம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

கணபதி ஸ்லோகம்:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

கணபதி ஸ்லோகம் :

கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

கணபதி ஸ்லோகம் :

மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே.

கணபதி ஸ்லோகம் :

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை கணபதி என்றிடக் காலனும் கைதொழும் கணபதி என்றிடக் கருமம் ஆதலால் கணபதி என்றிடக் கவலை தீருமே.

கணபதி ஸ்லோகம்:

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான்

பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.


கணபதி ஸ்லோகம் :

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா.

கணபதி ஸ்லோகம் :

வக்ரதுண்டாய ஹீம் ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

மகாகணபதி : (பரிபூரண சித்தி)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே வசமானய ஸ்வாஹா

ஹஸ்தீந்த்ரா நநமிந்து சூடமருணச் சாயம் த்ரி நேத்ரம் ரஸாத் ஆச்லிஷ்டம் ப்ரியயா ஸரோ ஜகரயா ஸ் வாங்கஸ்தய

கார்முக-லஸச்-சக்ராப்ஜ-பாசாத்பல

வ்ரீஹ்யக்ர-ஸ்வவிஷாண-ரத்நகலசாந் ஹஸ்லதர வஹந்தம்

மோகன கணபதி : (எப்போதும் பாதுகாப்பு)

ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய

க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே

வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா

லக்ஷ்மி கணபதி : (செல்வம் வளர)

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே

வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !

ஓம் கம் ஸ்ரீம் ஸௌம்யாய லக்ஷ்க்ஷ்மீ கணேச வரவரத ஆம் ஹ்ரீம் க்ரோம்

ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !

வக்ர துண்ட ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸௌ:

|பிப்ராண- சுக- பீஜபூரக- மிலந்-மாணிக்ய கும்பாங்குசாந்

பாசம் கல்பலதாம் ச கட்க வில

ஸஜ்ஜ்யோதி: ஸுதா நிர்ஜர

ச்யாமே நாத்த-ஸரோருஹேண

ஸஹிதம் தேவீத்வயம் சாந்திகே

கௌராங்கோ வரதாந- ஹஸ்த ஸஹிதோ

லக்ஷ்மி கணேசோவதாத்


ருணஹர கணபதி : (கடன் தொல்லை நீங்க)

ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட்


மகாவித்யா கணபதி : (தேவியின் அருள் கிட்ட)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம் கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத

ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

ஹரித்ரா கணபதி : (உலகம் வயப்பட)

ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே

வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா


வக்ரதுண்ட கணபதி : (அதிர்ஷ்ட லாபம்)

வக்ர துண்டாய ஹும்


நிதி கணபதி : (செல்வம் கிட்ட)

ராயஸ்பேஷஸ்ய ததி தா நிதி தோ ரத்னதா துமான். ர-க்ஷர்ஹணோ பலக ஹநோ வக்ரதுண்டாய ஹும்!!


புஷ்டி கணபதி:

ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே ஸ்வாஹா


பால கணபதி : மகிழ்ச்சி)

ஓம் கம் கணபதயே நமஸ் ஸித் தி தாய ஸ்வாஹா கரஸ்த-கதளீ சூத

பநஸேக்ஷப்கமோதகம் பால ஸுர்ய- நிபம் வந்தே தேவம் பால கணாதிபம்


சக்தி கணபதி (எல்லாக் காரியமும் நிறைவேற)

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம்

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க-யஷ்டிம் பரஸ்பராச் லிஷ்ட-கடிப்ரதேசம்

ஸந்த்யாருணம் பாசஸ்ருணி வஹந்தம்

பயாபஹம் சக்தி கணேசமீடே

ஸர்வ சக்தி கணபதி : (பாதுகாப்பு)

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா


க்ஷிப்ர பிரஸாத கணபதி : (சீக்கிரம் பயன்தர)

ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:


குக்ஷி கணபதி : (நோய் நீங்க)

ஓம் ஹும் க்லெளம் டட ராஜ

ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா

ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா


சந்தான லக்ஷ்மி கணபதி : (பிள்ளைப் பேறு உண்டாக)

ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய

மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா


சுவர்ண கணபதி: (தங்கம் கிடைக்க)

ஓம் க்ஷம் க்ஷிப்ர கணபதயே ஸுவர்ணகே ஹே வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம் வஷட்ஸ்வாஹா


விநாயகர் 108 போற்றிகள்:

1. ஓம் அத்தி முகனே போற்றி!

2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி!

3. ஓம் அம்மையே அப்பா போற்றி!

4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி!

5. ஓம் அமரர்கள் கோனே போற்றி!

6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி!

7. ஓம் அங்குச பாஸா போற்றி!

8. ஓம் அரு உருவானாய் போற்றி!

9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி!

10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி!

11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி!

12. ஓம் அவல், பொரி, அப்பம், அருந்துவோய் போற்றி!

13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி!

14. ஓம் ஆதி மூலமே போற்றி!

15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி!

16. ஓம் ஆரா அமுதா போற்றி!

17. ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி!

18. ஓம் இடையூறு களைவாய் போற்றி!

19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி!

20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி!

21. ஓம் ஈசனார் மகனே போற்றி!

22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி!

23. ஓம் உத்தமக் குணாளா போற்றி!

24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி!

25. ஓம் உண்மை நெறியாளா போற்றி!

26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி!

27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி!

28. ஓம் எங்குமே நிறைவாய் போற்றி!

29. ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி!

30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி!

31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி!

32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி!

33. ஓம் எண்குண சீலா போற்றி!

34. ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி!

35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி!

36. ஓம் ஏக நாயகனே போற்றி!

37. ஓம் எழில் மிகு தேவே போற்றி!

38. ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி!

39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி!

40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி!

41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி!

42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி!

43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி!

44. ஓம் முழு முதற் பொருளே போற்றி!

45. ஓம் ஒளி மிகு தேவே போற்றி!

46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி!

47. ஓம் கணத்து நாயகனே போற்றி!

48. ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி!

49. ஓம் கலைஞானக் குருவே போற்றி!

50. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி!

51. ஓம் கற்பக களிறே போற்றி!

52. ஓம் கண்கண்ட தேவே போற்றி!

53. ஓம் கந்தனை வென்றாய் போற்றி!

54. ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி!

55. ஓம் சங்கத்துத் தமிழே போற்றி!

56. ஓம் சரவணன் தொழுவாய் போற்றி!

57. ஓம் சர்வ லோகேசா போற்றி!

58. ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி!

59. ஓம் சுருதியின் முடிவே போற்றி!

60. ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி!

61. ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி!

62. ஓம் நாதனே, கீதா போற்றி!

63. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி!

64. ஓம் தாயினும் நல்லாய் போற்றி!

65. ஓம் தரும குணாளா போற்றி!

66. ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி!

67. ஓம் தூயவர் துணைவா போற்றி!

68. ஓம் துறவிகள் பொருளே போற்றி!

69. ஓம் நித்தனே, நிமலா போற்றி!

70. ஓம் நீதி சால் துரையே போற்றி!

71. ஒம் நீல மேனியனே போற்றி!

72. ஓம் நிர்மலி வேனியா போற்றி!

73. ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி!

74. ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி!

75. ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி!

76. ஓம் பாவலர் பணிவாய் போற்றி!

77. ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி!

78. ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி!

79. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி!

80. ஓம் முத்தியை தருவாய் போற்றி!

81. ஓம் வேழ முகத்தாய் போற்றி!

82. ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி!

83. ஓம் வேள்வியின் முதல்வா போற்றி!

84. ஓம் வேதாந்த விமலா போற்றி!

85. ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி!

86. ஓம் உடல் நலம் தருவாய் போற்றி!

87. ஓம் செல்வம் தருவாய் போற்றி!

88. ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி!

89. ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி!

90. ஓம் சினம், காமம், தவிர்ப்பாய் போற்றி!

91. ஓம் கல்வியை அருள்வாய் போற்றி!

92. ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி!

93. ஓம் ஒளவியம் அகற்றுவாய் போற்றி!

94. ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி!

95. ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி!

96. ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி!

97. ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி!

98. ஓம் அமிர்த கணேசா போற்றி!

99. ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி!

100. ஓம் வலம்புரி விநாயகா போற்றி!

101. ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி!

102. ஓம் சித்தி விநாயகா போற்றி!

101. ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி!

104. ஓம் சுந்தர விநாயகா போற்றி!

105. ஓம் சுக போகம் தருவாய் போற்றி!

106. ஓம் அனைத்து ஆனாய் போற்றி!

107. ஓம் ஆபத் சகாயா போற்றி!

108. ஓம் அமிர்த கணேசா போற்றி!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story