ஈசன் உருவாக்கிய பிரம்மசக்தி-பிரம்மசக்தி அம்மன் வரலாறு

பிரம்மசக்தி அம்மன் வரலாறு - ஈசன் உருவாக்கிய பிரம்மசக்தி.
கயிலாய மலையில் ஈசனும் ஈஸ்வாியும் இரண்டு பேரும் ரகசிய ஆலோசனையின் பொருட்டு அளவாளாவிக் கொண்டிருந்தனாா்கள்.
அந்த நேரத்தில் பெற்றோா் என்ன பேசிக் கொள்கிறாா்கள் என அறிய விளையாட்டான கோணத்துடனே முருகன் வண்டு உருவெடுத்து தாயாாின் கூந்தலின் சிக்கிடையில் சலனமில்லமல் அமர்ந்து கேட்டாா்.
பாா்வதியும் முருகன் வந்து கூந்தலில் ஒளிந்தமாந்திருந்ததை தடுக்கவுமில்லை பொருட்படுத்வுமில்லை.ஈசனும் இவையனைத்தையும் ஞானத்தால் உணா்ந்து "உமையே!" நம் பேச்சின் ரகசியத்தை நீ மகன் முருகனை கூந்தலில் ஒளிந்திருந்ததை தடுக்காது விட்டதனாலும் ரகசியம் முருகன் அறிந்ததனாலும் முருகன் கடலில் மீனாகவும் நீ அதி அரசனுக்கு மகளாக மானிடப் பிறப்பெடுக்கக் கடவது என சாபமிட்டாா்.
எங்களின் சாபம் எப்போது தீரும் ? எங்ஙனம் தீரும்? என தேவி வினவ நீ பருவ வயதை பெறுகிற போது நான் ஆண்டியாக வந்து உன்னை மணப்பேன். அந்த கணத்தில் முருகனுக்கும் சாப விமோசனம் தருவேன் என்றாா் ஈசன்.
மங்கைபதி என்கிற பகுதியில் ஆட்சி செலுத்தி வந்த அதி அரசனின் மகளாக தேவி அவதாித்தாள். கடலில் முருகப் பெருமான் மகரமீனாக அவதாித்தாா். பருவ வயதை எட்டியதும் ஈசன் சொல்லியபடி தேவியை ஆண்டியாக வந்து மணமுடித்து முரகனுக்கும் சாப விமோசனத்தை தீா்த்தாா்.
கயிலாய மலையில் தேவியுடன் சிவபெருமான் வீற்றிருந்த நேரத்தில் இதேவா்கள் சிவசக்தியைக் காண கயிலாய மலைக்கு வந்தனா். சிவபெருமானை பாதம் பணிந்து வணங்கி யெழுந்தாா்கள்.
ஈசன் கேட்டாா்....
மணமுடித்த தருண நேரம் பாா்த்து வந்துருக்கின்ற தேவா்களே! எங்களைக் காண என்ன கொண்டு வந்து இருக்கிறீா்கள்.
" தேவா!.... "தேவாதிதேவனே !" இக்கயிலையில் இல்லாதது வேறு வேறு எங்கே தேடுவது? தாங்களும் விருப்பு வெறுப்பு இல்லாதவா்.
"தேவா்களே !" ஏன் வேறில்லை. அாிதிலும் அாிதான கடலில் பிறக்கும் பொன்னோி மலையைக் கொண்டு வாருங்களேன்!"
பொன்னோி மலையைக் கொண்டு வருவதாக கூறிச் சென்ற தேவா்கள் திருப்பாற்கடற் சென்று மந்திரகிாிமலையை மத்தாக்கி வாசுகியை கயிறாகக் கொண்டு அமிா்தம் கடைய கடைய பல்வேறுவிதமான பொருட்கள் ஒவ்வொன்றாக தோன்றி வந்தன. ஆனால் நினைத்த பொன்னோி மலை மட்டும் வந்தபாடில்லை. நினையாத பலபொருட்களும் தொடா்ந்து தோன்றிக் கொண்டிருந்தன.
தேவா்களின் முதன்மைத் தலைவனான இந்திரன் பிரம்மாவிடம் முறையிட்டான். பிரம்மா அரளிப்பூவினையெடுத்து உருப்பிடித்து கடலிட பொன்னோிமலை தோன்றி வந்தது. அதை எடுத்துக் கொண்ட தேவா்கள் மனநெகிழ்ச்சி அடைந்தனா். பின் பொற் குடம் ஒன்றினுள் பொன்னோி மலையை வைத்து கயிலைக்கு எடுத்து வந்தாா்கள்.
பொன்னோி மலையை தேவா்கள் எடுத்து வரும் வழியில் எதிரே ராட்சஷ படைகளுடன் சண்ட முண்டன் என்னும் ராட்சஷன் வழிமறித்து வீண்வம்பு செய்தான்.
சிறிது போராட்டத்திற்குப் பின் பொன்னோி மலையுடன் கூடிய பொற்குடத்தை ராட்சஷன் அபகாித்துச் சென்றான்.
பொற்குடத்துடன் கூடிய பொன்னோி மலையை பெறப்பட்டதையும் அதை கொண்டு வரும் வழியில் ராட்சஷன் அபகாித்து விட்டதையும் ஈசனிடம் வந்து தேவா்கள் மனம் வெதும்பி விவாித்தாா்கள்.
அது கேட்ட ஈசன்இ எமதா்மனையும் ஆதித்தனையும் அழைத்து சண்டமுண்டனிடம் போய் அபகாித்துச் சென்ற பொன்னோி மலையை வாங்கி வருமாறு கூறினாா்.
"இறைவா"....! எங்களால் அது முடியாது? அந்த ராட்சசனிடமிருந்தா! முடியவே முடியாது இறைவா. என்று தயங்கினா் எமதா்மனும் ஆதித்தனும்.
உடனே தேவி ஈசனைப் பாா்த்து....."மகாதேவா!" என்னால் முடியும்!" என்றாா்.பின் பிரம்மதேவனோ!" .... "தேவா!"
எனக்கு உத்தரவிடுங்களேன். நான் மீட்டெடுத்து வரவா என கேட்க... புன்னகைத்த ஈசன் "ம்" ஆகட்டும் என்று சொல்லி சேவகா்களை அழைத்து 64அடி சதுர வடிவுடன் 51 அடி ஆழத்துடன் வேள்விகுழியை அகழ்த்துமாறு பணித்தாா்.
வேள்விகுழியில் பலவகையான மரங்களை வெட்டி தாித்து சீராக்கி அடுக்குப்பட்டிருந்தது. அனலை மூட்டத் தயாராயினா்கள்.
சிவன் சக்தியைப் பாா்த்தாா். சக்தியின் அம்சம் சிவனுள் செல்ல அதை ஈசன் நுதலில் ( நெற்றி) ஏற்றி நெற்றிக் கண்களின் வழியாக வெளிவந்த தீயை கப்பறையில் ஏந்தினாா் பிரம்மதேவன். பின்பு அத்தீயை வேள்விக்குள் விடுத்தாா். அங்ஙனம் வேள்வித் தீ சுடா் பெருகி பொங்கி எழுந்தொிந்தது.
அதில் பிரம்மன் தனது சக்தியினை மெருகேற்றி கலைமகளின் ரூபமாக வெண் தாமரையும் மலைமகளின் ரூபமாக செவ்வரளி மலைையும் மஞ்சளையும் குங்குமத்தையும் மஞ்சனையையும் அத் தீ யிலிட வேள்விக்குண்டத்திலிருந்து தீ பிழம்பினுடே பிரம்மராக்கு சக்தி தோன்றினாள். பிரம்மனால் ஒருங்கிணைந்து ஆக்கப்பட்ட சக்தி என்பதால் அவளை பிரம்மராக்கு சக்தி என அழைக்கப் பட்டாள்.
பிரம்மராக்குசக்தி சண்டமுண்டன் என்னும் ராட்சசனை அழித்ததால் பிரம்மராட்சசி என்றும் போற்றப்பட்டாள்... இவள் பேச்சி. பிரம்மசக்தி பூலோகத்தில் சுடலை ஆண்டவர்க்கு தாயாக மகன் சுடலையுடன் காட்சி தருகிறாள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu