யாவருக்கும் துன்பம் வராமல்.... தேவன் நம்மைஆசிர்வதிக்கட்டும்...

யாவருக்கும் துன்பம் வராமல்....  தேவன் நம்மைஆசிர்வதிக்கட்டும்...
X
blessing bible verses in tamil கிறிஸ்துவர்களின் புனித நுாலான பைபிளைப் படிக்கும்போது படிப்பவர்களுக்கு மனஅமைதி கிடைக்கிறது. நீங்களும் படித்து பாருங்கள்...


blessing bible verses in tamil


blessing bible verses in tamil

தமிழ் விவிலியம் என்பது யூதர்களும் கிறித்தவர்களும் தம் சமய மரபுக்கு அடித்தளமாகக் கருதுகின்ற விவிலியம் என்னும் திருநூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உருவான எழுத்துப் படைப்பைக் குறிக்கும்.திருவிவிலியம் அல்லது விவிலியம் என்னும் எழுத்துப் படையலின் ஒரு பெரும் பகுதி யூத சமயத்தாருக்கும் கிறித்தவர்களுக்கும் பொதுவானது. கிறித்தவர்கள் அப்பகுதியைப் "பழைய ஏற்பாடு" என்று கூறுவர். "புதிய ஏற்பாட்டில்" இயேசு கிறிஸ்துவின் வரலாறும் போதனையும் அடங்கியுள்ளன. யூதர்கள் மட்டுமே ஏற்கின்ற பழைய ஏற்பாடு என்னும் விவிலியப் பகுதி "எபிரேய விவிலியம்" என்றும் கூறப்படுவதுண்டு.

இயேசுவின் வாழ்வில் விவிலியம்

விவிலியம் என்பது பல நூல்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு ஆகும். "மனித மொழியில் அமைந்த கடவுளின் வார்த்தை" என விவிலியத்தைக் கிறித்தவர் போற்றுவர்.கிறிஸ்து பிறந்த காலத்தில், இன்று பழைய ஏற்பாடு என அழைக்கப்படுகின்ற விவிலியப் பகுதி மட்டுமே முழு விவிலியமாக இருந்தது. அதிலிருந்து ஒரு பகுதியையே இயேசு யூதர்களின் தொழுகைக் கூடத்தில் வாசித்தார் (காண்க: லூக்கா 4:16-28); தொழுகைக் கூடங்களில் வாசிக்கக் கேட்டார். இயேசு யூத ஆன்மிக நெறியை அறிந்து, அதைக் கடைப்பிடிக்க துணையாக இருந்தது இந்த விவிலியம் தான்.

இயேசு கிறிஸ்துவின் போதனையைக் கேட்டு, அவர் புரிந்த அதிசய செயல்களைப் பார்த்து அனுபவித்த மக்கள், அல்லது அந்த அனுபவத்தைப் பிறர் வழி பெற்றவர்கள் அந்த அனுபவத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்தனர். இவ்வாறு எழுந்த நூல்களின் தொகுப்பு புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றது. இதில் அடங்கியுள்ள நூல்களின் எண்ணிக்கை 27ஆகும்.

பைபிளின் வாசகங்கள் இதோ....

கடவுள் நம்மை நேசிக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார். ஆனால் எங்கள் துன்மார்க்கத்தின்காரணமாக, உங்கள் வாழ்க்கையில் அவருடைய ஆசீர்வாதங்களை இழக்கிறோம். நாம் தினமும் பயன்படுத்தும் இயற்கை விஷயங்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஆசீர்வாதம்எண்ணாகமம் 6:24-26:- "கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காப்பாற்றுவாராக!

கர்த்தர் உன்னிடம் நல்லவராக இருந்து அவர் உனக்குக் கருணை காட்டுவாராக!உனது ஜெபங்களுக்கு கர்த்தர் பதில் தருவாராக! அவர் உனக்குச் சமாதானத்தைத் தருவாராக!' என்று சொல்லுங்கள்" என்றார்"

2 கொரி 9:8:- "அவர்களுக்குத் தேவைக்கு மிகுதியான ஆசீர்வாதத்தை தேவனால் கொடுக்க முடியும். பிறகு உங்களிடமும் ஏராளமான செல்வம் சேரும். ஒவ்வொரு நற்செயலுக்கும் கொடுக்கப் போதுமான செல்வம் உங்களிடம் இருக்கும்"

பிலிப்பியர் 4:19:- "இயேசு கிறிஸ்துவின் மகிமையால் நமது தேவன் மிக உயர்ந்த செல்வந்தராக இருக்கிறார். அவர் அச்செல்வத்தைப் பயன்படுத்தி உமக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுப்பார்"

ரோமர் 15:13:- "தேவன் வழங்கும் விசுவாசம் உங்களை சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும் நிரப்பட்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிறகு உங்களுக்கு மேலும் மேலும் விசுவாசம் பெருகும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் அது நிரம்பி வழியும்"

நீதிமொழிகள் 10:22:- "கர்த்தருடைய ஆசீர்வாதம் உனக்கு உண்மையான செல்வத்தைக்கொண்டுவரும். அது துன்பத்தைக்கொண்டு வராது"

blessing bible verses in tamil


blessing bible verses in tamil

யாக்கோபு 1:17-18:- "எல்லா நன்மைகளும் தேவனிடமிருந்தே வருகின்றன. ஒவ்வொரு முழுமையான வரமும் அவரிடமிருந்தே வருகின்றது. இவை, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவற்றை உருவாக்கிய பிதாவிடமிருந்தே வருகின்றன. அவர் மாறுவதில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கிறார். உண்மையான வார்த்தை மூலமே தேவன் நமக்கு வாழ்க்கையைத் தர முடிவு செய்துள்ளார். அவரால் படைக்கப்பட்ட அனைத்திலும் நம்மையே முக்கியமானவையாகக் கருதுகிறார்".

யோவான் 1:16:- "அவர் (கிறிஸ்து) கிருபையும், உண்மையும் நிறைந்தவராய் இருந்தார். அவரிடமிருந்து நாமனைவரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம்".எரேமியா 7:23:- "நான் இந்தக் கட்டளையை மட்டும் கொடுத்தேன். 'எனக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது நான் உங்களது தேவனாக இருப்பேன். நீங்கள் என் ஜனமாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட அனைத்தும் செய்யுங்கள். உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்"

உபாகமம் 28:1-2:- "இப்போதும், நான் இன்று உங்களுக்குச் சொன்ன உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையெல்லாம் நீங்கள் கவனமாகக் கடைப்பிடிப்பீர்களேயானால், உங்கள் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள எல்லா ஜனங்களையும் விட உங்களை உயர்த்தி வைப்பார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிவீர்களேயானால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வரும்"

யாக்கோபு 1:12:- "சோதிக்கப்படும்போது உறுதியாய் இருக்கிற மனிதன் மிகுந்த பாக்கியவான் ஆகிறான். ஏனெனில் தான் நேசிக்கிறவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த வாழ்வு என்னும் பரிசை, சோதனையில் தேறிவிடும்போது அவன் பெறுவான்"

சங்கீதம் 67:7:- "தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும். பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்"

சங்கீதம் 3:8:- "கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார். கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்"

blessing bible verses in tamil


blessing bible verses in tamil

நீதிமொழிகள் 10:6:- "நல்லவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜனங்கள் தேவனை வேண்டுகின்றனர். தீயவர்களும் நல்லவற்றைப்பற்றிக் கூறலாம். ஆனால் அது, அவர்களின் கெட்ட செயல்களுக்கான திட்டங்களை மறைப்பதாக இருக்கும்"

1 கொரி 15:10:- "ஆனால் தேவனுடைய இரக்கத்தினால் இப்போதைய எனது தகுதியைப் பெற்றேன். தேவன் என்னிடம் காட்டிய இரக்கம் வீணாய் போகவில்லை. நான் மற்ற எல்லா அப்போஸ்தலரைக் காட்டிலும் கடினமாய் உழைத்தேன். (ஆனால், உண்மையில் உழைப்பவன் நான் அல்ல. தேவனுடைய இரக்கமே என்னோடு இருந்தது"

எபிரேயர் 6:7:- "அவர்கள் ஒரு வயலைப் போன்றவர்கள். அந்நிலம் மழை நீரை உறிஞ்சி தன்னை உழுகிறவர்களுக்கு நல்விளைச்சலைக் கொடுத்தால், பிறகு அதைப் பற்றி மக்கள் நல்ல வார்த்தைகளைச் சொல்கிறார்கள். ஆனால் முள்செடிகளையும் களைகளையும் தவிர வேறு எதையும் கொடுக்காத நிலத்தை மக்கள் சபிப்பார்கள். மேலும், பிறகு அது எரியூட்டப்படும்"

பிரசங்கி 5:19:- "தேவன், ஒருவனுக்குச் செல்வத்தையும் சொத்துக்களையும் அவற்றை அனுபவிப்பதற்கான உரிமையையும் கொடுத்திருக்கும்போது அவன் அவற்றை அனுபவித்து மகிழவேண்டும். இதனை ஏற்றுக்கொண்டு அவன் தனது வேலையில் இன்பம் காண வேண்டும். இது தேவனால் கொடுக்கப்பட்ட பரிசு"

எபேசியர் 1:3:- "நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். பரலோகத்தில் அவர் கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய சகல ஆசிகளையும் நமக்குத் தந்துள்ளார்"

நீதிமொழிகள் 10:7:- "நல்லவர்கள் நல்ல நினைவுகளை விட்டுவிட்டுச் செல்கின்றனர். தீயவர்கள் விரைவில் மறக்கப்படுகின்றனர்"

உபாகமம் 28:2:- "நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிவீர்களேயானால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வரும்"

எரேமியா 29:11:- "நான் இதனைக் கூறுகிறேன் ஏனென்றால், உங்களுக்காக நான் வைத்துள்ள திட்டங்களை நானறிவேன்" இச்செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது. "நான் உங்களுக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறேன். நான் உங்களை துன்புறுத்தும் வகையில் திட்டமிடமாட்டேன். உங்களுக்கு நம்பிக்கையைத் தரவும் நல்ல எதிர்காலம் அமையவும் நான் திட்டமிடுகிறேன்"

blessing bible verses in tamil


blessing bible verses in tamil

சங்கீதம் 20:4:- "தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன்.உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்"

நீதிமொழிகள் 16:7:- "ஒருவன் நல்ல வாழ்க்கை வாழ்ந்து, கர்த்தருக்குப் பிரியமானவற்றைச் செய்தால், அவனது பகைவன்கூட அவனுடன் சமாதானமாக வாழ்வான்"

யோவேல் 2:26:- "பிறகு உங்களுக்கு உண்ண ஏராளம் இருக்கும்.நீங்கள் நிறைவு அடைவீர்கள்.நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் போற்றுவீர்கள்.அவர் உங்களுக்காக அற்புதமானவற்றைச் செய்திருக்கிறார்.

எனது ஜனங்கள் இனி ஒருபோதும் வெட்டகப்பட்டுப்போவதில்லை"

1 தெசலோனிக்கேயர் 5:24:- "உங்களை அழைக்கிற தேவன் இவற்றை உங்களுக்குச் செய்வார். அவரை நம்புங்கள்"

யோபு 6:14:-"ஒருவனுக்குத் தொல்லைகள் நேர்கையில், அவனது நண்பர்கள் அவனிடம் இரக்கமாயிருக்கட்டும். ஒருவன் அவனது நண்பனிடம், அவன் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து விலகிச்சென்றால் கூட, நம்பிக்கைக்குரியவனாக நடந்துக்கொள்ளட்டும்" நீதிமொழிகள் 18:24:-"பேசிச் ...

வெளி 22:21:-"கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக" எபிரேயர் 4:16:-"எனவே, நமக்குத் தேவைப்படும் சமயத்தில் தேவனுடைய கிருபையும் இரக்கமும் நமக்குக் கிடைக்கும் வகையில் கிருபை உள்ள ...

1 தெசலோனிக்கேயர் 5:8:-"ஆனால் நாம் பகலுக்குரியவர்கள். எனவே நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மைக் காத்துக்கொள்வதற்காக விசுவாசம், அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்துகொள்வோம். நம் தலைக்கவசமாய் ...

blessing bible verses in tamil


blessing bible verses in tamil

1 பேதுரு 1:15-16:-"உங்களை அழைத்த தேவன் பரிசுத்தமானவர். ஆதலால் நீங்களும் நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் பரிசுத்தமானவர்களாக இருங்கள். வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. "நான் பரிசுத்தராக இருப்பதால், ...

சங்கீதம் 106:1:-"கர்த்தரைத் துதியுங்கள்! கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது" 1 தெசலோனிக்கேயர் 5:18:-"தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே ...

பிலிப்பியர் 4:13:-"கிறிஸ்துவின் மூலம் எனக்கு எல்லாவற்றையும் செய்ய வலிமை இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்குப் பலத்தைக் கொடுக்கிறார்" ஏசாயா 41:10:-"கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.பயப்படாதே, நான் உனது ...

ஆதியாகமம் 2:18:-"மேலும் தேவனாகிய கர்த்தர், "ஒரு ஆண் தனியாக இருப்பது நல்லதல்ல, எனவே அவனுக்கு உதவியாக அவனைப்போன்று ஒரு துணையை உருவாக்குவேன்" என்றார்"எபிரேயர் 13:4:-"திருமணம் என்பது அனைவராலும் ...

எரேமியா 33:6:- "ஆனால் பிறகு அந்நகரில் உள்ள ஜனங்களை நான் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்). அந்த ஜனங்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும்படிச் செய்வேன்" ஏசாயா 53:5:- "ஆனால், நாம் ...

ரோமர் 14:8:- "நாம் அனைவரும் வாழும்போது கர்த்தருக்காகவே வாழ்கிறோம். சாகும்போது கர்த்தருக்காகவே சாகிறோம். வாழ்வதானாலும் சரி, சாவதானாலும் சரி நாம் கர்த்தருக்குச் சொந்தம் ஆனவர்கள்" பிரசங்கி 12:7:- ...

Tags

Next Story