குல தெய்வ வழிபாடு, ராகுகேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீலக்ஷமி நரசிம்மர் வழிபாடு -பலன்கள் என்ன?

குல தெய்வ வழிபாடு, ராகுகேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீலக்ஷமி நரசிம்மர் வழிபாடு -பலன்கள் என்ன?
X
வலுவான விருப்பமும் சக்தியும் கொண்ட ஒருவரை அல்லது 'ஆன்மீக' ஆளுமை கொண்ட ஒருவரின் மீது இதனை செலுத்துவது கடினம்.

செய்வினைகளின் பாதிப்பினை நீக்கும் பரிகாரங்கள்!

செய்வினை என்பது ஒருவரை அழிக்க மந்திரவாதிகளைக் கொண்டு செய்யப்படும் தீய யாகமாகும். தனக்கு விருப்பமில்லாத ஒருவன் எல்லா வழிகளிலும் கெட்டு அழிந்து போக செய்யப்படும் மாந்திரிக முறையே செய்வினை எனப்படுகிறது. மிகவும் கொடுமையான மாந்திரிக முறைகளில் இதுவும் ஒன்று. செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகளின் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம்.

செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய பரிகாரம் முறை உண்டு. ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே.

இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இப்படிப்பட்ட செய்வினை (Black Magic), ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.

கெடுதலை ஏற்படுத்தக்கூடிய மந்திரங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை உண்மையில் உங்களுக்குச் சொல்லக்கூடியவர்கள் இன்றுவரை யாரும் இல்லை. இந்த கேள்வி நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது, ஆனால்,மக்களால் இன்னும் ஒரு பதிலைக் கொண்டு வர முடியவில்லை. பகுத்தறிவால் விளக்க முடியாத விஷயங்கள் இங்கே நடக்கின்றன, மேலும் விசித்திரமான விளக்கங்களை நம்பலாமா வேண்டாமா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இன்றைய காலகட்டத்திலும் தங்களை மந்திரவாதிகள் அல்லது சூனியக்காரர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்களும் இவ்வுலகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.அதற்காக அவர்கள் சாத்தான்கள் இல்லை, மற்றும் அவர்கள் அனைவரும் பிசாசுகளை வணங்குவதும் இல்லை.

இவைகள் ஒரு சாதாரண மனிதனுக்கோ, இடத்துக்கோ அல்லது பொருளுக்கோ தற்காலிகமாகப் பயனளிக்கலாம் அல்லது அவர்களில் எவருக்கும் சேதம் ஏற்படலாம். இருப்பினும், வலுவான விருப்பமும் சக்தியும் கொண்ட ஒருவரை அல்லது 'ஆன்மீக' ஆளுமை கொண்ட ஒருவரின் மீது செலுத்துவது கடினம்.

சரி வாங்க இன்னும் விரிவாக தெரிந்துகொள்வோம்.

பாதிப்படையும் கிரக நிலை :

லக்னம் மற்றும் லக்னாதிபதி 6ஃ8ஃ12 தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது.

சந்திரன் லக்னத்திற்கு 4ஃ8ஃ12 ஆகிய வீடுகளில் நிற்பது. சந்திரன் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது சந்திரன் ராகுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6ஃ8ஃ12 வீடுகளில் நிற்பது.

ஆத்ம காரகனாகிய சூரியன் கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6ஃ8ஃ12 வீடுகளில் நிற்பது. தேய்பிறையில் பஞ்சமிக்கு பிறகு வரும் திதிகளில் குறிப்பாக அஷ்டமியில் பிறந்திருப்பது.

சந்திராஷ்டம காலங்கள், அமாவாசை போன்ற சந்திரபலம் குறைந்த தினங்கள்.

செய்வினை யாரிடம் பலிக்காது :

வேதத்தை ஓதும் அந்தணர்களிடம் அபிசாரம் பயனளிக்காது. குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் தெய்வாம்சம் நிறைந்திருப்பதால் அவர்களிடம் அபிசார வித்தைகள் பயனளிக்காது.

காயத்ரி மந்திர ஜெபம் செய்பவர்களிடம் அபிசார வித்தைகள் அனுகாது.

ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயத்தில் பிறந்தவர்களிடமும், கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி மகம் மற்றும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடமும் பலிக்காது. மேலும் லக்னத்தில் ராகு அல்லது கேது இருப்பவர்கள், கிரஹன காலங்களில் பிறந்தவர்களிடமும் பலிக்காது.

செய்வினையை நிவர்த்தி செய்யும் பரிகாரங்கள் :

குல தெய்வ வழிபாடு, பித்ருகள் வழிபாடு, ராகுஃகேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீலக்ஷமி நரசிம்மர் வழிபாடு, ப்ரத்யங்கிரா வழிபாடு மற்றும் காளி வழிபாடு.

மனோ பலம் தரும் திருக்கடையூர் அபிராமி வழிபாடு மற்றும் குணசீலம், திருப்பதி வழிபாடு மற்றும் சந்திரனுக்கு வரமளித்த சந்திர மௌளீஸ்வரர் மற்றும் காமாக்ஷி வழிபாடுகள்.

மேலும் குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.

சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா சப்தஸ்லோகி பாராயணம் செய்பவர்கள், மேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரி சங்கு, பசு இவற்றை பூஜிப்பவர்கள் ஆகியவர்களை அபிசாரங்கள் நெருங்குவதில்லை.

ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழம்-18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை-18, கதம்பப்பூ - ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். மேலும் அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்துவதே மனோவசியம் மற்றும் அபிசார தோஷங்கள் நீங்க சிறந்த வழியாகும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்