bible words in tamil கடவுளை வணங்குங்கள் அவர் உங்களை ஆசிர்வதிப்பார்....

bible words in tamil  கடவுளை வணங்குங்கள்  அவர் உங்களை ஆசிர்வதிப்பார்....
X
bible words in tamil கிறிஸ்துவர்களின் புனித நுாலான பைபிளில் அனைத்து வகையான கருத்துகளும் அடங்கியுள்ளன. இது ஒரு பொக்கிஷம் என்று கூட சொல்லலாம்.

bible words in tamil



bible words in tamil

விவிலியம் என்பது யூதர் மற்றும் கிறித்தவர் ஆகியோரின் புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியமானது, ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு மட்டுமன்றி, உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரைக் கொண்டிருப்பினும் யூதர், கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும்.கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்றும் யூதர்களால் தனக் என்றும் அழைக்கப்படுகிறது. கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.(குறிப்பு: யூதர்கள் புதிய ஏற்பாடை நம்புவதில்லை)

உலகத்திலேயே திருவிவிலியம் எனும் 'பைபிள்' தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயர்க்கப்பட்ட நூல். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான விவிலியப் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். விவிலியத்தில் அடங்கியிருக்கும் நூல்களில் எவற்றை அதிகாரப்பூர்வமானவை என ஏற்பது என்பது குறித்து கிறிஸ்தவ பிரிவினரான கத்தோலிக்கர், கிழக்கு மரபுவழி திருச்சபையினர், சீர்த்திருத்தகர்கள் ஆகியோரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக யெருசலேமின் இரண்டாவது ஆலயத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் இணைத் திருமுறை நூல்களை கத்தோலிக்க, கிழக்கு மரபுவழி மற்றும் சில சீர்த்திருத்த திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் நூல்களாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பெரும்பாலான சீர்த்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை அதிகாரப்பூர்வமானவையாக ஏற்றுக்கொள்வதில்லை. மேலும், இந்நூல்கள் யூதமத விவிலியத்திலும் காணப்படுவதில்லை. இச்சிறு வேறுபாடுகளைத் தவிர்த்தவிடத்து விவிலியத்தில் வேறு வேற்றுமைகள் இல்லை. மேலும், இணைத் திருமுறை நூல்கள் சேர்க்கப்படுவதாலோ அல்லது அவை நீக்கப்படுவதாலோ கிறிஸ்தவத்தின் அடிப்படைகள் மாற்றமடைவதில்லை.

bible words in tamil


bible words in tamil

கிறித்தவ விவிலியம் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன:

பழைய ஏற்பாடு (எபிரேயப் புனித நூல்கள்) மற்றும்இயேசுவின் பிறப்புக்குப் பின்னரான காலத்தில் எழுதப்பட்டு, இயேசுவின் போதனைகளையும் தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வையும் உள்ளடக்கிய புதிய ஏற்பாடு என்பனவாகும்.பண்டைய மொழிகளான எபிரேயத்திலும் கிரேக்கத்திலும் எழுதப்பட்ட நூல்தொகுதியாகிய விவிலியத்தின் மொழிபெயர்ப்புகளில் ஆங்காங்கே மாறுபாடுகள் காணப்படுகின்றன.

தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் - 2 கொரிந்தியர் 9:15

ஜெபத்தைக் கேட்கிறவரே மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் -சங்கீதம் 65:2

இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன்உன்னைத் தப்புவிப்பார் -தாணியேல் 6:16

ஜூவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம்உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள் -எபிரெயா 3:12

பூமியிலுள்ள வைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் -கொலோசயர் 3:2

நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டாதபடிக்கு கிறி்ஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன் -ரோமர் 15:21

தேவன் என்னை தமது ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப்போல் வைத்திருக்கிறபடியால் அவருக்கு ஸ்தோத்திரம்

நீங்களும் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்

மத்தேயு-6:8

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து உன் கால் சிக்கிக் கொள்ளாதபடி காப்பார் -நீதிமொழிகள் 3:௨௬

bible words in tamil


bible words in tamil

நிச்சயமாகவே முடிவு உண்டு :உன் நம்பிக்கை வீண் போகாது -நீதிமொழிகள் 23:18

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்- ஏசாயா 54:17

இதோ , என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்-ஏசாயா 49:16

அவர் நமது சிறகுகளாலே உன்னை மூடுவார்.அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய். அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும் -

உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்-சங்கீதம் 128 :2

கர்த்தர் தாமே உனக்கு முன்பாக போகிறவர்.அவர் உன்னோட இருப்பார். அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை, நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்- உபாகமம் 31:8

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் :நீர் செய்ய நினைத்தது தடைப்படாது என்பதை அறிந்திருக்கிறேன்-யோபு 42:2

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். -சங்கீதம் 1:2

ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்-ரோமர் 8:26

கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம்-ஏசாயா 60:20

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே.அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை -புலம்பல் 3:22

நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன் , ஆகையால் நான் தள்ளாடுவதில்லை -சங்கீதம் 26:1

கர்த்தர் உன் களஞ்சியங்களிலும் நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசிர்வாதம் கட்டளையிடுவார்-உபாகமம் 28.8

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்-

bible words in tamil


bible words in tamil

ஜூவனைப்பார்க்கிலும் உன் கிருபை நல்லது, என் உதடுகள் உம்மைத்துதிக்கும்- சங்கீதம் 63:3

அவரை விசுவாசிக்கறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்கிறது-ரோமர் 10:11

கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்:உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மை பாராட்டுவேன்-சங்கீதம் 71:16

என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக்கூப்பிட்டேன் :அவர் எனக்கு செவி கொடுத்தார் -சங்கீதம் 120:1

உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும் -2கொரி்ந்தியர் 12:9

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு-2 தீமோத்தேயு 4;2

உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்-எரேமியா 1:8

ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார் -யோபு 9:10

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!