காலங்கள், காட்சிகள் மாறினாலும் நம் லட்சியத்தினை மட்டும் மாற்றக்கூடாது....
War Quotes in Tamil
War Quotes in Tamil
மனிதர்களாகப் பிறந்த நம்மை நெறிப்படுத்துவது ஆன்மீகம் மற்றும் இதிகாசப்புராணங்கள் தான். ஆக ஒவ்வொருவரும் இந்த இதிகாசப்புராணங்களுக்கு நேரம் செலவிட்டு படிக்கவேண்டியது மிக மிக அவசியம் ஆகும். காரணம் ஒவ்வொரு வரிகளும் அர்த்தமுள்ளவை. ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளன. ஆன்மீகப் பற்று உள்ளவர்கள் கடவுளுக்கு பயந்து தம் வாழ்க்கையினை ஒழுக்க நெறிமுறைகளோடு வாழ்கிறார்கள். ஆனால் பற்றற்றவர்கள் செய்யும் செயல்கள் மதிக்கத்தக்கவை அல்ல. நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்களை இவர்கள் செய்வதால் இறைவனே இவர்களைத் தண்டிக்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.
உலகிலுள்ள பல மொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் கீதையின் முதல் மொழிபெயர்ப்பு கிழக்கிந்தியக் கம்பெனியாரால் செய்யப்பட்டது. அம்மொழிபெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் எனும் ஆங்கில ஆட்சியாளர் முன்னுரை அளித்ததில் "இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றிய பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டுவருமானால் இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
War Quotes in Tamil
War Quotes in Tamil
பகவத் கீதை மிகவும் பிரபலமானமற்றும் இந்து மத நூல்களில் மிகவும் செல்வாக்கு மிக்க நூல் ஆகும்இந்து மதம் அதன் பன்முகத்தன்மை மற்றும் அதன் தொகுப்புக்காக அறியப்பட்டாலும், பகவத் கீதை ஒரு தனித்துவமான அனைத்து சமய ஹிந்துக்களும் ஏற்கும் செல்வாக்கைக் கொண்டுள்ளது
இந்நூலை பிரஸ்தான த்ரயம் என்றும் சொல்வதுண்டு. இதற்கு பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றோடு பகவத் கீதையும் இணைந்து மூன்று அஸ்திவாரங்கள் என்று பொருள்படி பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கப்படுகிறது
பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும்.
War Quotes in Tamil
War Quotes in Tamil
மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அர்ச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதையாகும். இதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனனின் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும்.
பகவத் கீதை மிகவும் பிரபலமானமற்றும் இந்து மத நூல்களில் மிகவும் செல்வாக்கு மிக்க நூல் ஆகும்இந்து மதம் அதன் பன்முகத்தன்மை மற்றும் அதன் தொகுப்புக்காக அறியப்பட்டாலும், பகவத் கீதை ஒரு தனித்துவமான அனைத்து சமய ஹிந்துக்களும் ஏற்கும் செல்வாக்கைக் கொண்டுள்ளது
பகவத் கீதை உன்னத உபதேசங்கள்....
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
சண்டைக்கு பின் வரும் சமாதானத்தை விட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.
நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
War Quotes in Tamil
War Quotes in Tamil
மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம் ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
நீ எதிர்பார்க்கும் பாசம் ஓரிடத்தில் தடைப் பட்டால் அதில் ஏற்படும் வலி அதிகம் தான். ஆனால் அதை நீ உன்னை பக்குவப்படுத்த பயன்படுத்திக்கொள், கடினம் தான். ஆனால், இதுவே நிரந்தரம்.
War Quotes in Tamil
War Quotes in Tamil
சில நேரங்களில் நாம் சரியான இலக்கை தீர்மானிக்கிறோம். ஆனால், தவறான இலக்கை சென்றடையும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செயல்படுங்கள்.
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் தன் கொண்ட லட்சியத்தை மட்டும் மாற்றக்கூடாது.
யாராவது உன்னை ஒதுக்கி வைத்தால் கவலை ஏன்? யார் உன்னை எந்த தூரத்தில் வைக்கிறார்களோ அந்த தூரத்தில் வாழ கற்றுக்கொள். அதனால் ஒரு நஷ்டமும் இல்லை உன்னோடு நான் இருக்கிறேன்..! அது போதாதா?
எதிர்பார்ப்புகள் சில நேரங்களில் ஏமாற்றங்கள் தரும். கடமையைச் செய் பலனை எதிர்பாராமல் இருப்பதே அநேக அற்புதங்களுக்கு வழி வகுத்து விடும்.
எல்லாமே ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்கிறது. உங்களுக்கு நல்லது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கிறது, தீயது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கிறது.
War Quotes in Tamil
War Quotes in Tamil
உங்களிடம் இல்லாதவற்றை நினைத்து கவலை கொள்வதை விடுத்து கிடைத்ததை வைத்து பொறுமை கொண்டால் உங்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும்.
புகழ்பூத்த பெருமைகளுடன் மக்கள் மன்றத்தில் நாயகனாய் போற்றப்படுபவர், இழிவான செயல்களில் ஈடுபட்டு மானத்தை இழக்க நேர்ந்தால் அந்த நிலை மரணத்தை விட மோசமானது
சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
முன்னோக்கிச் செல்லும் போது கனிவாயிரு, ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும் துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன ஒன்று காலம் இன்னொன்று மெளனம்.
எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்
War Quotes in Tamil
War Quotes in Tamil
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
கற்ற அறிவையும் பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான் சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாக இருக்கும்.
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது ல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu