பகவத் கீதை கூறும் வாழ்க்கைக்கான பொன்மொழிகள்..
Geethai Quotes in Tamil
Geethai Quotes in Tamil
பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை
- பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
- அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
- உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
- அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
- "அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி" என அறிந்து கொள்.
- இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
- ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
- "எல்லாமே நான் இறந்த பிறகு தான்" என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
- எனவே, கொடுக்க நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
- மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
- மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
- அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
- பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
- நண்பர்களிடம் அளவளாவு.
- நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
- இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
- வாழ்வை கண்டு களி!
- ரசனையோடு வாழ்! வாழ்க்கை வாழ்வதற்கே!
நாலு பேர் தப்பா பேசக்கூடாது. நாலு பேருக்கு நல்லது செய் என நாம் சாதாரணமாக கூறுகிறோம். பகவத் கீதையிலும் நான்கு பேரை பற்றி கூறப்பட்டிடுக்கிறது. படித்துப் பாருங்கள்
நான்கு நபர்களை புறக்கணி!
- மடையன்
- சுயநலக்காரன்
- முட்டாள்
- ஓய்வாக இருப்பவன்
நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
- பொய்யன்
- துரோகி
- பொறாமைக்கைரன்
- மமதை பிடித்தவன்
நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
- அனாதை
- ஏழை
- முதியவர்
- நோயாளி
நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
- மனைவி
- பிள்ளைகள்
- குடும்பம்
- சேவகன்
நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
- பொறுமை
- சாந்த குணம்
- அறிவு
- அன்பு
நான்கு நபர்களை வெறுக்காதே!
- தந்தை
- தாய்
- சகோதரன்
- சகோதரி
நான்கு விசயங்களை குறை!
- உணவு
- தூக்கம்
- சோம்பல்
- பேச்சு
நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
- துக்கம்
- கவலை
- இயலாமை
- கஞ்சத்தனம்
நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
- மனத்தூய்மை உள்ளவன்
- வாக்கை நிறைவேற்றுபவன்
- கண்ணியமானவன்
- உண்மையாளன்
நான்கு விசயங்கள் செய்!
- தியானம், யோகா
- நூல் வாசிப்பு
- உடற்பயிற்சி
- சேவை செய்தல்
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu