அனைத்து ராசியினருக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

அனைத்து ராசியினருக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
X
08.10.2023 ஞாயிற்றுக்கிழமை மேஷ ராசியில் இருந்து ராகு மீன ராசிக்கும், துலாம் ராசியில் இருந்து கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜெனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார்.

சோபக்ருது வருஷம் புரட்டாசி மாதம் 21ம் தேதி (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை, க்ருஷ்ணபக்ஷ தசமியும் பூச நக்ஷத்ரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 23:59க்கு (மாலை மணி 03:40 க்கு) கும்ப லக்னத்தில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். கேது பகவான் துலா ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.

மாறக்கூடிய ராகு பகவான் விசுவாவசு வருஷம் சித்திரை மாதம் 13ம் தேதி (26.04.2025) வெள்ளிக்கிழமை வரை மீனத்தில் இருந்து அருளாட்சி வழங்குவார். கேது பகவான் கன்னியில் இருந்து அருளாட்சி வழங்குவார்.

பொது பலன்கள்: ராகுவை வைத்து தகப்பானார் வழிகளையும், கேதுவை வைத்து தாயார் வழிகளையும் புரிந்து கொள்ள இயலும். எனவே தான் ராகு தந்தை வழி காரகன் என்றும் கேதுவை தாய் வழி காரகன் என்றும் சொல்கின்றனர். ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம், களத்திர தோஷம், பிதுர் தோஷம், புத்திர தோஷம் போன்றவற்றை சொல்ல முடியும். கல்வி, ஞானம், திருமணம், மக்கட்பேறு, வேலை, வெளிநாடு சம்பாத்தியம், கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு கேது முக்கியமானவர்களாகும்.

கன்னி ராசி மற்றும் மீன ராசி என்பது உபய ராசியாகும். இதில் மீன ராசி பஞ்ச பூத தத்துவத்தில் நீரையும் , கன்னியா ராசி என்பது பஞ்ச பூத தத்துவத்தில் நிலத்தையும் குறிக்கும். ராகு என்பது மிகப் பெரிய என்ற விஷயங்களையும் கேது என்பது குறுகிய விஷயங்களையும் குறிக்கும். இந்த பெயர்ச்சியினால் வறட்சி குறையும். மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். ஏரி குளம் போன்றவை நிரம்பும். அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த குழப்ப நிலை நீங்கும். புதிய ஆட்சி மாற்றம் ஏற்படலாம். தண்ணீர் சார்ந்த இடங்களில் அதிகளவு விபத்து, அகால மரணங்கள் போன்றவை ஏற்படும். பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.

ஐரோப்பிய தேசங்களில் இருந்து வந்த தொய்வு நீங்கும். அமெரிக்க தேசத்தில் இருந்து வரும் சுணக்க நிலை மாறும். இஸ்லாமிய தேசங்களில் ஒற்றுமையுணர்வு ஓங்கும். இந்திய தேசத்தைப் பொறுத்தமட்டில் ராஜாங்க ரீதியான நடவடிக்கைகள் ஏற்றம் பெறும். ராணுவ ரீதியாக மிகப் பெரிய வளர்ச்சி இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை புதிய புதிய மருந்துகள் கண்டுபிடிப்பார்கள். ரியல் எஸ்டேட் துறை கொஞ்ச கொஞ்சமாக வளர்ச்சி அடையும்.

பெரும்பாலான கோவில்களில் இன்று ராகு கேது பெயர்ச்சி பரிகார யாகங்கள் செய்கின்றனர். சிறப்பு அபிஷேகங்களும் லட்சார்ச்சனையும் செய்கின்றனர். திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் 30ஆம் தேதி நிகழ உள்ளது. மேஷ ராசியில் இருந்து ராகு மீன ராசிக்கும் துலாம் ராசியில் இருந்து கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகமும் திடீர் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.


மேஷம்: செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு 12ம இடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் மாறுகிறார்கள். . "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்ற சொல்லுக்கு இணங்க மறைவு ஸ்தானத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். இதனால் திருமணம் கிரகபிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். ராகு 12 ம் இடத்திற்கு மாறுவதால் வெளிநாட்டு பயணம், தொழில் அமையும் வாய்ப்பு கிட்டும். சிலருக்கு வீடு மாற்றம் ஊர் மாற்றம் நேரிடும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். கடன்கள் அடைபடும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எல்லாம் மாறும். காரியங்களில் தோல்வியை கண்டு அஞ்சாத உங்களுக்கு வெற்றியை எட்டி பிடிக்க வைக்கும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி குடும்பத்தில் அமைதி ஆனந்தம் கிடைக்கும்.


ரிஷபம்: லாப ஸ்தானமான 11ல் வரும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவு போன்றவற்றை அளிப்பார். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஒயமாட்டிர்கள். பிரச்சினைகள் தானாகவே மறைந்து விடும். ஏதேனும் வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமான தீர்ப்பை கொடுக்கும். 5ஆம் வீட்டில் கேது வருவதால் காரிய வெற்றியும் வாக்கு நாணயத்தையும் காப்பாற்றி கொள்ளலாம். புதிய முயற்சிகள் கை கூடும். புதிய மனிதர்களின் தொடர்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். ஏமாற்றியவர்களின் முகத்தில் கரியை பூசி விடுவீர்கள். ஏமாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தலை நிமிர்ந்து வாழலாம். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும். உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். 5ல் கேது இருப்பதால் குலதெய்வ பிரார்த்தனை செய்தால் குடும்பம் செழிக்கும் கவலைகள் நீங்கும்.


மிதுனம் : பத்தாம் வீட்டில் ராகுவும் நான்காம் வீட்டில் கேதுவும் வருவதால் யோகங்கள் தேடி வரப்போகின்றன. எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த வேலை வாய்ப்பு அமையும். நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்லாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மறைமுக எதிர்ப்பு விலகும். இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். அஷ்டம சனியால் தோல்விகளை சந்தித்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சியும் ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தரும். குரு பகவானும் உங்களுக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுக்கப்போகிறார்.


கடகம்: அஷ்டம சனியால் கஷ்டங்களை சந்தித்து வரும் உங்களுக்கு ஆறுதலாக வருகிறது ராகு கேது பெயர்ச்சி. ஒன்பதாம் இடத்தில் ராகு மூன்றாம் வீட்டில் கேதுவும் பயணம் செய்யப்போகின்றனர். தசாபுத்தி யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது. குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில், வேலைகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். நினைத்த காரியம் கை கூடும். அஷ்டமத்து சனியால் வம்பு வழக்குகளை சந்தித்தவர்களுக்கு ராகு கேது விடிவையும் கொடுப்பார்.


சிம்மம் : ராசிக்கு 8ஆம் வீட்டில் ராகுவும், 2ஆம் வீட்டிற்கு கேதுவும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது கெட்ட ஸ்தானமாகும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல பாவ கிரகம் 8ஆம் வீட்டில் வந்தால் கெடுதல்களை அழிப்பார். ராகு பெருமையையும் புகழையும் தருவார். எதிர்பாராத செல்வ சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். தொழிலில் நிலையான தன்மை கிடைக்கும். வருமானம் சேமிப்பு உயரும். கேது 2ஆம் வீட்டிற்கு வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்களுடைய முயற்சி வெற்றியை தரும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.


கன்னி: உங்கள் ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகின்றனர். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு பயணம் செய்யப்போகிறார் புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் ராசியில் கேது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். அடுத்த ஆண்டு மே மாதம் குரு ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போது கன்னி ராசியின் மீது குருவின் பார்வை விழுகிறது. அந்த வகையில் கேதுவுக்கு குரு பார்வை கிடைப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரும். கஷ்டங்களில் இருந்து விடிவு விமோசனம் ஆகியவற்றை அடையலாம். இது வரை ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.


ராகு 6ஆம் இடத்திற்கும் கேது 12ஆம் இடத்திற்கும் பெயர்ச்சி அடையப்போகின்றனர். ஆறாம் இடத்திற்கு ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் வருவதால் புது முயற்சிகள் கை கூடும். சேமிப்புகள் உயரும். சுப தேவைகளுக்கு கடன் வாங்க நேரிடும். இந்த ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும். நினைத்த காரியம் நிறைவேறும், ராகு கேது பெயர்ச்சி பண வருமானத்தோடு அறிவையும் ஞானத்தையும் தரப்போகிறது.


விருச்சிகம்: ராகு ராசிக்கு 5ஆம் வீட்டிற்கும் கேது லாப ஸ்தானமான 11ம் இடத்திற்கும் பெயர்கிறார்கள். உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும். செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இது வரை தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் அமைதியும் நிலவும். ராகு கேது பெயர்ச்சி ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தொழில் நிலை யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் கொடுக்கும். வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். ராகு கேது பெயர்ச்சியால் தோஷங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும்.


ராகு நான்காம் வீட்டிற்கும் கேது 10ஆம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடையப்போகின்றனர். 4ஆம் பாவம் தாயார், சுகம், வாகனம் கல்வி, நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ஆம் பாவத்திற்கு ராகு வருகிறார். பத்தில் ஒரு பாவி இருந்தால் பதவி யோகம் தேடி வரும் என்று சொல்வார்கள். இது வரை தடைப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். ராகு பகவான் வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும். பணவரவுகள் சேமிப்பாக உயரும். பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகியவற்றை குறிக்கும். அந்த ஸ்தானதிற்கு கேது வருகிறார். லாப ஸ்தானத்தில் இருந்து யோகத்தை செய்த கேது இப்பொழதும் யோககாரனாக செயல்பட்டு யோக பலனை வாரி வழங்குவார். தனுசு ராசிக்காரர்களுக்கு இன்னும் 18 மாதங்களுக்கு நல்லதே நடக்கும்.


"ராகு பதினொன்று, மூன்று, ஆறாம் இடத்திற்கு சேரின்

பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும்.

காரியங்களுண்டாம், அன்னதானங்களுண்டாம்.

வாகு மதி மணமுண்டாம், வரத்து மேல் வரத்துண்டாம்"

என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார். கடந்த முன்று ஆண்டுகளாக கஷ்டம், பலவிதமான பிரச்சனைகள் கடன், வம்பு, வழக்குகள் இதை எல்லாம் முறியடித்து தலைநிமிர்ந்து வாழ வழி செய்யப்போகிறார் ராகு பகவான். வரன் தேடியும் அமையாத திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். உங்களின் நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். மோட்சத்தை கொடுக்க கூடிய கேது பகவான் 9ஆம் வீட்டிற்கு வருவதால் உங்களுக்கு பொற்காலம் ஆரம்பமாகப்போகிறது. யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். இனி எந்த பிரச்சினைகள் வந்தாலும் ராகு கேது உங்களை காப்பாற்றி நல்ல வழி வாழ நல்லது செய்யும்.


கும்பம்: குடும்ப ஸ்தானமான 2ம் இடத்தில் ராகுவும்,8ம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, நண்பர்கள் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்து வீடு மனைகளால் பிரச்சனை வரலாம். எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு வாய்ப்பு கை கூடிவரும். வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரைய செலவுகள் ஏற்படும். கேது 8ஆம் வீட்டில் இருப்பதால் தொட்டது துலங்கும். கேது பகவான் போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் அழிப்பார். கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கப்போகிறது. பொற்காலம் ஆரம்பம்


மீனம்:

"ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஜந்து இடத்தில்

கருநாகம் அமர்ந்திருக்க பூ மேவும் ராஜயோகம்

தனிதுயில் என்று புகழலாமே"

என்ற யோகத்தால் எதையும் சாதிக்கும் வல்லமையை ராகு கொடுத்தார். ஜென்ம ராசியில் வரும் ராகுவிற்கு கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது. நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். சிலருக்கு மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும். தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம், இடமாற்றம் வரலாம். நண்பர்கள் உதவியால் பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலை அமையும். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். ராகு கொடுத்தால் கேது கெடுப்பார். எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். ராகு 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!