Ganesha Chaturthi Festival- விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதால் கிடைக்கும் பேறுகள் பற்றி அறிவோமா?

Ganesha Chaturthi Festival- விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதால் கிடைக்கும் பேறுகள் பற்றி அறிவோமா?
X

Ganesha Chaturthi Festival- ’கணபதி என்றிட கவலைகள் நீங்குமே’ (கோப்பு படம்)

Ganesha Chaturthi Festival-விநாயகர் சதுர்த்தி விழா என்பது, மக்களின் எழுச்சி விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. விநாயகரை மனதார வழிபட்டு சதுர்த்தி கொண்டாடுவதால், 21 வகையான பேறுகளை நாம் அடையலாம்.

Ganesha Chaturthi Festival, 21 Benefits- எந்த ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகிற போது அவரின் அருள் கிடைக்கும் என்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகிறது.


விநாயகப்பெருமானுடைய சிறப்பினை உணர்த்த, விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாக தாம் உணர்ந்த விநாயக புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிருகு முனிவருக்கு உபதேசிக்க அவர் இப்புராணத்தை 250 பிரிவுகளையுடைய உபாசனா காண்டம், லீலா காண்டம் என இரு காண்டங்களாக அமைத்துப் பன்னிரெண்டாயிரம் சுலோகங்களாக "ஸ்ரீ விநாயகர் புராணம்" பாடினார்.

விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப்பெருமான் எடுத்த பன்னிரண்டு அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன. அந்த அவதாரங்களில் அவர், வக்கிரதுண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மயூரேசர், பாலசந்திரர், தூமகேது, கணேசர், கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது.


பார்வதி தேவி மண்ணால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து ஸ்ரீ விநாயகராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுகின்றோம். மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபாடு செய்தல் வேண்டும்.

விநாயக சதுர்த்தி வழிபாட்டினால் 21 விதமான பேறுகள் நமக்கு கிடைக்கும்

1. தர்மம்

2. பொருள்

3. இன்பம்

4. சௌபாக்கியம்

5. கல்வி

6. பெருந்தன்மை

7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்

8. முக லட்சணம்

9. வீரம்

10. வெற்றி


11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல்

12. நல்ல சந்ததி

13. நல்ல குடும்பம்

14. நுண்ணறிவு

15. நற்புகழ்


16. சோகம் இல்லாமை

17. அசுபங்கள் அகலும்

18. வாக்கு சித்தி

19. சாந்தம்

20. பில்லி சூனியம் நீங்குதல்

21. அடக்கம்

ஆகிய 21 விதமான பேறுகள் பக்தர்களாகிய நமக்கு கிடைக்கும். எனவே, வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடி, கணபதியை வழிபடுவோம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!