Horoscope Today 12 ராசிகளுக்கான ஆகஸ்ட் 8, இன்றைய ராசிபலன்
பைல் படம்.
சோபகிருது வருடம் ஆடி 23 (8 ஆகஸ்ட் 2023) செவ்வாய்க் கிழமை. தேய்பிறை அஷ்டமி திதி உள்ள இன்று கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம்.
மேஷ ராசியினருக்கு இன்றைய நாள் மிகவும் திருப்திகரமான நாளாகவே இருக்கும். வருங்காலத்திற்கு பலன் தரும் படியாக ஏதேனும் முயற்சியினை மேற்கொண்டால் அந்த முயற்சி கட்டாயமாக கைகூடும். மேலும், தொழில் ரீதியாக முன்னேறுவதற்கு பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு இன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் முயற்சிகளுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
ரிஷப ராசியினருக்கு நண்பர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். வாழ்வில் முன்னேறுவது குறித்த முக்கிய முடிவினை இன்று எடுப்பீர்கள். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்குள் அன்னோன்யம் இருந்திருந்தால் அந்த பிரச்சனை அகலும். இன்று தன லாபங்கள் அதிகரிக்கும். இன்று பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம்.
மிதுன ராசியினருக்கு இன்று பல நாட்களாக தடைப்பட்ட காரியம் ஒன்று நல்ல முறையில் நடைபெறும். அதன் மூலமாகவே, எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், தோல் சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சனை இருந்தால் மாற்று மருத்துவத்தின் மூலமாக உடல்நிலை சீராக இருக்கும். இன்று பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், திடீர் பண ஆதாயத்தைப் பெறுவீர்கள்.
கடக ராசியினருக்கு இன்று மிகவும் அமோகமான நாள். எந்த காரியம் செய்தாலும் அந்த காரியம் வெற்றியை பெற்றுக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத நேரத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். மனதிற்கு நிறைவான நாளாக இருக்கும். இன்று முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதால் வெற்றி கிடைக்கும்.
சிம்ம ராசியினருக்கு இன்று கூடுதல் கவனம் தேவைப்படும். மனம் குழப்பமாக இருக்கும் நேரத்தில் எத்தகைய முடிவும் எடுக்க வேண்டாம். இன்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம். உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவைப்படும்.
கன்னி ராசியினருக்கு இன்றையநாள் நல்ல நாளாகவே அமையும். அதாவது, நீண்ட நாளாக நடைபெறாது என்ற நினைத்த காரியம் இன்று கைகூடும். தலை மற்றும் உடல் வலியால் மந்தமாக உணர்வார்கள். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம் ராசியினருக்கு நல்ல ஒரு தகவல் வந்தடையும். குடும்பத்திலும் நிம்மதி பிறக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடமும், சக ஊழியர்களிடமும் அனுசரித்துச் செல்லவும். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
விருச்சிக ராசியினருக்கு நீண்டகாலமாக குடும்பத்தில் பெற்றோர்களின் மத்தியில் பிரச்சனை இருந்து வந்தால் அந்த பிரச்சனை சுமூகமாக முடியும். நண்பர்களின் மத்தியில் ஆதரவு கிடைக்கும். இன்று பிடிவாத குணத்தை விட்டு விட்டு இணக்கமான நடத்தையை கடைப்பிடிக்க வேண்டி வரும். வேலையில், குழப்பமான மனநிலை உறுதியான முடிவையும் எடுக்க கடினமானதாக இருக்கும். புதிய வேலையைத் தொடங்குவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
தனுசு ராசியினருக்கு பயணத்தால் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். வேலை மற்றும் வியாபாரத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும் பணமும், பதவி உயர்வும் கிடைப்பதால் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.
மகர ராசியினருக்கு கைபேசி தகவல் ஒன்று மனதை நிம்மதி அடைய செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சில சஞ்சலங்கள் நிகழ்ந்து வருவதால் வேலையில் இருந்து விடுபடலாமா என்கிற ஆலோசனைஇருக்கும். இல்லற வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
கும்ப ராசியினருக்கு இன்று மிகவும் நல்ல நாளாகவே அமையும். வீடு மனைகள் கட்டி வருபவர்களுக்கு இன்று மீதி கட்டட பணி முடிய வாய்ப்புள்ளது. பொருளாதாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இதனையடுத்து, வழக்கு விஷயங்கள் சாதகமாகும். உடலாலும், மனதாலும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பீர்கள்
மீன ராசியினர் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகி நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். சிக்கல்கள் அனைத்தும் விலகி நல்லது வந்து சேரும் நாள். குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள், கடன் தொல்லை தீரும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தவிட வேண்டாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu