ஆடி 3-வது வெள்ளியையொட்டி எல்லையம்மன் வெள்ளிக் கவசத்தில் அருள் பாலிப்பு

ஆடி 3-வது வெள்ளியையொட்டி எல்லையம்மன் வெள்ளிக் கவசத்தில் அருள் பாலிப்பு
X

ஆற்பாக்கம் ஸ்ரீ எல்லையம்மன் இன்று ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி சிறப்பு வெள்ளிக் கவசத்தில் அருள் பாலித்தார்.

ஆற்பாக்கம் எல்லையம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி இன்று 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு பரிகார தளங்களும் திவ்ய தேசங்களும் உலக புகழ் பெற்ற திருக்கோயில்களும் உள்ளன. இது மட்டுமில்லாமல் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இதே போன்ற பல்வேறு திருக்கோயில்களும் உள்ளன.

தற்போது ஆடி மாதம் நடைபெற்று வருகிற நிலையில் புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன், ஊத்துக்காடு எல்லையம்மன், சந்தவெளி அம்மன், கரிக்கினில் அமர்ந்தவள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் புகழ்பெற்ற கிராம தேவதை எல்லையம்மன் பிடாரியம்மன் உள்ளிட்ட திருக்கோயில்களும் மிகவும் புகழ் பெற்றது.

ஆடி மாதத்தையொட்டி பல்வேறு அம்மன் திருக்கோயில்களில் சிறப்பு பூஜையுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் கிராம வீதிகள் மட்டுமில்லாமல் நகர வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். மேலும் பல்வேறு திருக்கோயில்களில் 108 பால்குட அபிஷேகம் பூஜைகளும் நடந்தேறி வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆற்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம். பல நூற்றாண்டுகளைக் கடந்து தற்போது இப்பகுதி மக்களால் அதிக அளவில் சிறப்பு பூஜைகளுடன் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

ஆடி மாதத்தையொட்டி பக்தர்கள் பந்தக்கால் பூஜைகளுடன் துவங்கி திருவிழாவிற்காக காப்பு கட்டி கடந்த 10 தினங்களாக விரதம் இருந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கிராம பெண்கள் ஒன்றிணைந்து 108 பால்குட எடுத்து கிராம வீதிகள் வழியாக ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்திற்கு வந்திருந்து எல்லையம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேக பூஜை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ எல்லையம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு வளையல் மாலைகள் மற்றும் மலர் அலங்காரங்களால் சிறப்பு செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.

ஆடி மாத திருவிழாவில் எட்டி திருக்கோயில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!