திருப்பதி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்
திருமலை தெப்போற்சவம் - கோப்புப்படம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் மார்ச் 3-ம்தேதி தொடங்கி 7-ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன. 3ம் தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
4ம் தேதி இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் கிருஷ்ணர், ருக்மணி எழுந்தருளி மூன்று சுற்றுகள் வலம் வருகிறார்கள். 5-ம் தேதி மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
6ம் தேதி நான்காம் நாள் நிகழ்ச்சியில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி ஐந்து சுற்றுகள் பவனி வருகிறார்கள்.
7ம் தேதி ஐந்தாவது நாள் நிகழ்ச்சியில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி ஏழு சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
தெப்போற்சவத்தையொட்டி மார்ச் மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சஹஸ்ர தீபலங்கார சேவை, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
தோமால சேவை, அர்ச்சனை தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகின்றன. 7ம் தேதி ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட நாட்களில் தெப்போற்சவம் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu