ஐயப்ப பக்தர்களுக்காக திருச்சியில் இருந்து 27 டன் உணவு பொருட்கள்

ஐயப்ப பக்தர்களுக்காக திருச்சியில் இருந்து 27 டன் உணவு பொருட்கள்
X
திருச்சி ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரி மலைக்கு உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
ஐயப்ப பக்தர்களுக்காக திருச்சியில் இருந்து 27 டன் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக திருச்சியில் இருந்து 27 டன் உணவு பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு ஜோதிக்காக தற்போது நடை திறக்கப்பட்டுள்ளது.கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்ப கோஷம் எங்கும் கேட்க முடியும். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை செல்ல தொடங்கி உள்ளனர்.

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலங்களில் சபரிமலையில் வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்படுவது உண்டு.எரிமேலி, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் அன்னதானம் நடைபெறும். இந்த அன்னதானத்தில் அகில இந்திய ஐயப்ப சேவா சங்கமம் முக்கிய பங்காற்றி வருகிற.

திருச்சியில் இருந்து செயல்படும் இந்த சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஐயப்ப சீசன் தொடங்கி விட்டதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை வழிபட்டு செல்கிறார்கள்.

இப்படி தரிசனத்திற்காக இருமுடி கட்டி வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதற்காக திருச்சியில் உள்ள அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 27 டன் உணவு பொருட்கள் இரண்டு லாரிகளில் ஏற்றி அனுப்பப்பட்டது. இதில் மளிகை பொருட்கள் மற்றும் பிஸ்கட் போன்றவை அடங்கி உள்ளன .இந்த வாகனத்தை ஐயப்ப சேவா சங்கத் தலைவர் முரளி மற்றும் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். அவர்களுடன் அதனை விநியோகம் செய்வதற்காக ஒரு குழுவினரும் புறப்பட்டு சென்று உள்ளனர்.

Tags

Next Story