ஜோதிடத்தின் அஸ்திவாரமான நட்சத்திரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?.... படிங்க....
27 Natchathiram List in Tamil
27 Natchathiram List in Tamil-ஜோதிடசாஸ்திரத்தில் மிக மிக முக்கியமானது நட்சத்திரம் ஆகும். கிரகங்களை விடநட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்தநட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது.
ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ அந்த நட்சத்திரம் எந்தராசிக்கு உரியதோ அதுவே அவரது ஜென்ம ராசியாகும். ராசிகள் மொத்தம் 12 உள்ளன. மொத்த நட்சத்திரம் 27 ஆகும். இங்கு ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டு 1,2,3,4 பாதங்கள் என்று குறிக்கப்படுகின்றன.
பாதம் என்றால் என்ன?
ஒரு நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளை பிரிப்பதே பாதங்கள். ஒளிக்கற்றைகளைநான்காகப் பிரிப்பார்கள். அதனால்தான் 4 பாதங்கள். நாழிகள் தான் கணக்கு. அதாவது
ஒரு நட்சத்திரம் என்றால் 60 நாழிகை. அதை நான்காகப் பிரித்தால் 15 நிமிடங்கள்.ஒரு நட்சத்திரத்தின் முதல் 15 நிமிடம் முதல் பாதம், அடுத்த 15 நிமிடம் இரண்டாம்
பாதம். அதுபோல பிரித்துக் கொள்வார்கள்.
27 நட்சத்திரங்கள் :
1. அஸ்வினி,2. பரணி,3. கார்த்திகை,4. ரோகிணி.5. மிருகசீரிஷம்,6. திருவாதிரை.7. புனர்பூசம்.8. பூசம்,9. ஆயில்யம்,10. மகம்,11. பூரம்,12. உத்திரம்.13. அஸ்தம்,14. சித்திரை,15. சுவாதி,16. விசாகம்.17. அனுஷம்,18. கேட்டை,19. மூலம்20. பூராடம்
21. உத்திராடம்22. திருவோணம்23. அவிட்டம்.24. சதயம்25. பூரட்டாதி26. உத்திரட்டாதி.27. ரேவதி.நட்சத்திரங்கள் சமமாக ஒவ்வொரு இராசிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொன்றுக்கும் சரிசமமாக பிரித்துகொடுக்கப்பட்ட நட்சத்திர பாதங்கள் பின்வருமாறு.
மேஷ ராசி : 0 to 30 டிகிரி
நட்சத்திர பாதங்கள்
அஸ்வினி : 1,2,3,4
பரணி : 1,2,3,4
கிருத்திகை : 1
ரிஷப ராசி : 30 to 60 டிகிரி
நட்சத்திர பாதங்கள்
கிருத்திகை : 2,3,4
ரோகிணி : 1,2,3,4
மிருகசீரிடம் : 1,2
மிதுன ராசி : 60 to 90 டிகிரி
நட்சத்திர பாதங்கள்
மிருகசீரிடம் : 3,4
திருவாதிரை : 1,2,3,4
புனர்பூசம் : 1,2,3
கடக ராசி : 90 to 120 டிகிரி
நட்சத்திர பாதங்கள்
புனர்பூசம் : 4
பூசம் : 1,2,3,4
ஆயில்யம் : 1,2,3,4
சிம்ம ராசி : 120 to 150 டிகிரி
நட்சத்திர பாதங்கள்
மகம் : 1,2,3,4
பூரம் : 1,2,3,4
உத்திரம் : 1
கன்னி ராசி : 150 to 180 டிகிரி
நட்சத்திர பாதங்கள்
உத்திரம் : 2,3,4
அஸ்தம் : 1,2,3,4
சித்திரை : 1,2
துலாம் ராசி : 180 to 210 டிகிரி
நட்சத்திர பாதங்கள்
சித்திரை : 3,4
சுவாதி : 1,2,3,4
விசாகம் : 1,2,3
விருச்சிக ராசி : 210 to 240 டிகிரி
நட்சத்திர பாதங்கள்
விசாகம் : 4
அனுஷம் : 1,2,3,4
கேட்டை : 1,2,3,4
தனுசு ராசி : 240 to 270 டிகிரி
நட்சத்திர பாதங்கள்
மூலம் : 1,2,3,4
பூராடம் : 1,2,3,4
உத்திராடம் : 1
மகர ராசி : 270 to 300 டிகிரி
நட்சத்திர பாதங்கள்
உத்திராடம் : 2,3,4
திருவோணம் : 1,2,3,4
அவிட்டம் : 1,2
கும்ப ராசி : 300 to 330 டிகிரி
நட்சத்திர பாதங்கள்
அவிட்டம் : 3,4
சதயம் : 1,2,3,4
பூரட்டாதி : 1,2,3
மீன ராசி : 330 to 360 டிகிரி
நட்சத்திர பாதங்கள்
பூரட்டாதி : 4
உத்திரட்டாதி : 1,2,3,4
ரேவதி : 1,2,3,4
இதுபோல் ஒவ்வொரு ராசிக்கும் பாதங்கள் வாரியாக பிரிக்கப்பட்டு குணநலன்களும் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது.
குழந்தை பிறந்த நேரத்தில் என்ன நட்சத்திரம் உள்ளதோ அதுவே அவர்களுடைய ஜென்மநட்சத்திரமாக கணக்கிடப்படுகிறது. இந்த நட்சத்திரந்தான் அவர்கள் இருக்கும் வரையில் ஜோதிடக்கலையில் பயன்படுகிறது.
அதேபோல் ராசியும், நட்சத்திரமும் மிக முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்தின் பாதமும் ஒவ்வொரு குணநலன்களைக்கொண்டதாக உள்ளது.அதேபோல் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் வழிபடும் இறைவன் வேறுபடுகிறது.
நட்சத்திரம் - கடவுள் - மரம்
அஸ்வினி விநாயகர் எட்டி
பரணி ரங்கநாதர் நெல்லி
கிருத்திகை ஆஞ்சநேயர் அத்தி
ரோஹிணி சிவன் நாவல்
மிருகசீரிடம் துர்கை கருங்காலி
திருவாதிரை பைரவர் செம்மரம்
புனர்பூசம் ராகவேந்திரர் மூங்கில்
பூசம் சிவன் அரசு
ஆயில்யம் பெருமாள் புன்னை
மகம் விநாயகர் ஆலம்
பூரம் ரங்கநாதர் பலா
உத்திரம் ஆஞ்சநேயர் அலரி
அஸ்தம் சிவன் வேலம்
சித்திரை துர்க்கை வில்வம்
சுவாதி பைரவர் மருது
விசாகம் ராகவேந்திரர் விலா
அனுஷம் சிவன் மகிழம்
கேட்டை பெருமாள் குட்டிப் பலா
மூலம் விநாயகர் மா
பூராடம் ரங்கநாதர் வஞ்சி
உத்திராடம் ஆஞ்சநேயர் சக்கைப்பலா
திருவோணம் சிவன் எருக்கு
அவிட்டம் துர்க்கை வன்னி
சதயம் பைரவர் கடம்பு
பூரட்டாதி ராகவேந்திரர் கருமருது
உத்திரட்டாதி சிவன் வேம்பு
ரேவதி பெருமாள் இலுப்பை
மேலும், இந்த நட்சத்திரங்களின் அதிதேவதைகள் ஒவ்வொருவரையும் போற்றி வணங்க, பல மந்திரங்களும், பாடல்களும் உள்ளன. இவற்றை ஓதியும், பாடியும், அந்த கடவுளர்களை பத்தியுடனும், நம்பிக்கையுடனும் வணங்கி வருவதன் வழியாகவும், அந்த இறைவன், இறைவியின் அருளையும், அவர்கள் ஆட்சி செய்யும் ஜன்ம நட்சத்திரத்தின் ஆசியையும் பெற முடியும்.
அவரவரது ஜன்ம நட்சத்திரங்களின் தேவதைகளாக விளங்கும் கடவுளர்களை வழிபட்டு, போற்றிப் பாடி வணங்கி, அந்த நட்சத்திரங்களுக்குரிய மரங்களை நட்டு, வளர்த்து, பாதுகாத்து, சக்தி வாய்ந்த அந்த ஜன்ம நட்சத்திரங்களின் அருளைப் பெற்று, வாழ்வில், அனைத்து வளங்களையும் பெறுவோமாக.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu