ஊரும் பேரும் - தெரிந்த முப்பந்தல் தெரியாத வரலாறு

ஊரும் பேரும் - தெரிந்த முப்பந்தல் தெரியாத வரலாறு
X

முப்பந்தல் இசக்கி அம்மன்

சேர,சோழ, பாண்டிய மன்னர்களை அழைத்து ஓளவையார் இங்கு ஒரு திருமணத்தை நடத்தியதாக வரலாறு உண்டு. மூன்று மன்னர்களும் பந்தல் அமைத்து தங்கியதால் முப்பந்தல் எனப் பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்

ஊரும் பேரும் - தெரிந்த முப்பந்தல் தெரியாத வரலாறு

முப்பந்தல் என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த ஒரு கிராமமாகும். இங்கு அரபிக்கடலிலிருந்து காற்று ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக வருகிறது.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களை அழைத்து ஓளவையார் இங்கு ஒரு திருமணத்தை நடத்தியதாக வரலாறு உண்டு. மூன்று மன்னர்களும் பந்தல் அமைத்து தங்கியதால் முப்பந்தல் எனப் பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். முப்பந்தல் கிராமம் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.


முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் தலவரலாறு செவிவழிச் செய்தியாக அறியப்படுகிறது. முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர் என்னும் ஊர். இந்த ஊாில் நாட்டியப்பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் வாழ்ந்து வந்தாள். அவள் மீது ஆசை கொண்ட ஒருவன் இசக்கியை ஏமாற்றி கர்ப்பவதியாக்கினான். இசக்கி குழந்தையை ஈன்றாள். ஆனால் திருமணம் செய்ய மறுத்தான். இதனால் மனமுடைந்து போன இசக்கி ஊர் பொியவர்களை அழைத்து பஞ்சாயத்துக் கூட்டி முறையிட்டாள். அவள் கர்ப்பத்திற்கு அவனே காரணம் என்பதை ஊர் நம்ப மறுத்து விட்டது. எனக்கும் என் குழந்தைக்கும் நியாயம் கிடைக்காததால் இவ்வூாில் எவருக்கும் கர்ப்பம் தாிக்காது போகட்டும் என்று சாபமிட்டு அவ்விடம் விட்டு நீங்கிச் சென்று குழந்தையோடு தற்கொலை செய்து கொண்டார். அவள் சாபமிட்டுச் சென்ற அடுத்த கணம் பஞ்சாயத்து நடந்த இடத்தின் ஆலமரக்கிளை ஒடிந்து விழுந்து ஊர் பொியவர்கள் முதல் இசக்கியை ஏமாற்றிய கயவன் வரை அனைவரும் மாண்டு போனார்கள்.

சாபத்திற்கு ஆளானதால் அவ்வூர் மக்கள் புத்திர பாக்கியமின்றி தவித்தனர். இந்நிலையில் ஒரு நாள் முப்பந்தல் அருகே ஒரு பெண் அலறுவது போல் ஒரு சத்தத்தைக் கேட்டனர். எல்லோரும் சென்று பார்த்த போது சுயம்புவாய் ஒரு அம்மன் உருவம் தென்பட்டது. ஊரைக் காக்கவே தான் வந்துள்ளதாகவும். இசக்கிக்கு துரோகம் செய்ததால் அந்நிலை வந்ததாகவும் அசரீரி ஒலித்தது. இதனால் இசக்கியின் நினைவாக இவ்வம்மனுக்கு இசக்கியம்மன் என்ற திருநாமம் சூட்டி ஆலயம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

முப்பந்தலில் கருவறை அம்மன் வடக்குப் பார்த்து காட்சி தருகிறாள். கருவறை சுற்றுச் சுவரில் வைஷ்ணவி, துர்க்கை, பிரத்தியங்கரா தேவி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கோயில் சுற்றுப் பிரகாரத்தில் வலம்புாி விநாயகரும் பால முருகனும் ஒளவையாருக்கு ஒளவையாரம்மன் என்ற பெயாில் தனி சன்னதியும் உள்ளது. முகப்பில் காவல் தெய்வங்களான சுடலை மாட சுவாமியும், பட்டவராயரும் தனி சன்னதியில் உள்ளனர்.

முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் ஆடிமாதம் கடைசி செவ்வாய்க் கிழமை மிகப்பொிய திருவிழா நடைபெற்று வருகிறது. தைமாதத்தில் அம்மனுக்கு மலர் அபிஷேகமும் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!