பாவத்தை போக்கிய கடற்கரை - விஜயாபதி..
Vijayapathi Temple
Vijayapathi Temple
திருநெல்வேலி என்றால் அல்வா மதுரை என்றால் மல்லிகை என்பது போல திருநெல்வேலி மாவட்டத்திற்கும் சுதந்திர போரட்ட வீர்ர்களுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அது மட்டுமல்ல இதிகாசத்திற்கம் திருநெல்வேலிக்கும் அதிக தொடர்பு உண்டு.
குறு முன அகத்தியரை மதிக்காமல் சென்ற வரமுனிக்கு அகத்தியர் அளித்த சாபம் பின்னர் வரமுனி எல்லையில்லா சக்தி பெற்று மக்களை கொடுமைப்படுத்த அவரை அழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் கண்களில் தோன்றிய உக்கிர பார்வையில் உருவான துர்க்கை மகிஷாசுரனை அழித்தது விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் உருவாகி தென்மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் சுட்டெறிக்கும் கோடையிலும் வற்றாத ஜீவநதி தாமிரபரணி குறுமுனி அகத்தியர் சித்திரை விசு தினத்தன்று சிவசக்தி திருமணத்தை பாபநாசம் கல்யாண தீர்த்தம் பகுதியில் இருந்து தரிசித்த மகிழ்ச்சியில் தன்கையில் இருந்த கமண்டலத்தில் இருந்த நீரைக் கொண்டு தமிழ்க்கடவுள் பிறந்த வைகாசி விசாகதினத்தன்று உருவாக்கியதாக புராணகால வரலாறு கூறுகிறது.
மேலும் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் பெற்று நெல்லையப்பர் கோவில் தமிழகத்தில் 3 வது மிகப்பெரிய தேரை தன்னடக்கியது.மேலும் ஒரு மைல் கல்லாக இந்தியாவின் ஒட்டு மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது .கடந்த சில ஆண்டுகளுக்குமுன்னர் போராட்டக்களமாக திகழ்ந்த கூடங்குளம் ஒரு காலத்தில் அமைதி சோலையாக இருந்ததை அப்பகுதி மக்கள் நினைவு கூர்ந்துள்ளனர். நெல்லை மாவட்டம் புராணங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
Vijayapathi Temple
ராமாயணத்தின் பல நிகழ்வுகள் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ராதாபுரம் தாலுகாவில் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் அமைந்துள்ள விஜயாபதி கிராம பகுதியில் தாடகை என்ற கொடும் அரக்கியை கொன்றதாக வரலாற்றில் சான்றுகள் உள்ளன.
உத்திரபிரதேச மாநிலம் உஜ்ஜைனி பகுதியைச் சேர்ந்த மாமன்னர் விசுவாமித்திரர், பொழுது போக்குவரதற்காக வேட்டைக்கு சென்ற அவருக்கு தாகம் ஏற்படவே நடுக்காட்டில் உள்ள வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்திற்கு சென்றார்.அவரை வரவேற்ற முனிவர் வசிஷ்டர் காமதேனு பசு மூலமாக தண்ணீரை வரவழைத்து விசுவாமித்திரருக்கு வழங்கினார். இதையடுத்து காமதேனுவை கவர்ந்து செல்ல விசுவாமித்திரர் முடிவு செய்தார்.
தன்னுடைய படைபலம் மூலம் காமதேனுவை கவர திட்டமிட்டார்.காமதேனுவை பிடிக்க சென்ற அனைத்து படைவீரர் களையும் காமதேனு துவம்சம் செய்த்து.எந்த நிலையிலும் அவராலும், அவரது படைவீரர்களாலும் பசுவினை அழைத்துச் செல்ல முடியவில்லை. காமதேனுவுக்கும், வசிஷ்ட முனிவருக்கு அப்படி ஒரு அற்புதசக்தி எங்கிருந்து வந்தது என விசுவாமித்திரர் கேட்க தூய்மையான பக்தியுடன் இறைவனை நினைத்தால் இத்தகைய வலிமை கிடைக்கும் என்ற பதில் கிடைத்தது.
இந்த வார்த்தையினால் அரச வாழ்க்கையை வெறுத்த விசுவாமித்திரர் துறவரம் பூண்டு தவம் இருக்க காசிக்கு சென்றுவிட்டு தென் திசை நோக்கி பயணத்தை மேற்கொண்டார். தில்லையம்பதி என அழைக்கப்படும் சிதம்பரத்தில் தங்கி விட்டு அங்கிருந்து குமரி முனை நோக்கி தனது நடைபயணத்தை விசுவாமித்திரர் தொடங்கினார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட விஜயாபதி கிராமத்தில் அவரது கால் தடம் பதிந்த நேரத்தில் தாழம் பூவின் நறுமணம் அவரை ஈர்த்தது. பசுமரங்கள் நிறைந்த சோலையான விஜயாபதியை தவத்திற்கான இடமாக விசுவாமித்திரர் தேர்வு செய்தார். அவர் தவத்தை தொடங்கிய சில காலங்களில் தாடகை என்ற அரக்கியின் குறுக்கீடு ஏற்படவே, அவளை அழிக்க யாரால் முடியும் என சிந்தனை செய்து அயோத்தியா நகரத்தில் வாழும் தசரத மன்னனின் புதல்வர் ராமபிரானால் மட்டுமே தாடகையை அழிக்க முடியும் என ஞானத்தின் மூலம் உணர்ந்தார்.மேலும் ராமர் விஷ்ணு பகவானின் அவதாரம் என்பதை உணர்ந்து உதவிக்கு அனுப்பி உதவும்படி அயோத்தி மன்னரிடம் விசுவாமித்திரர் முறையிட்டார்.
தசரதரோ ராமன் மட்டுமல்லாது லட்சுமணனையும் சேர்த்து அனுப்பினார். தென்னாட்டுக்கு வந்த அவர்கள் 3 பேரும் விஜயாபதி மடத்தில் தங்கினர். மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணத்துடன் விசுவாமித்திரர் ஓமகுண்ட விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து தொடங்கிய தவத்தை, கலைக்கும் நோக்குடன் வந்த தாடகையை விஜயாபதி கிராமத்தில் ராமர் அம்பு எய்து கொன்றார். பெண்ணை கொன்ற பாவத்தினை சுமந்த ராமருக்கு விஜயாபதி கடலில் பாவமோசனம் செய்து வைத்தார் விசுவாமித்திரர்.
இத்தகைய சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது. ஆன்மீக மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இன்றும் விஜயாபதி கிராமத்தில் விசுவாமித்திரர் தவம் மேற்கொண்ட இடம், அவர் வழிபாடு செய்த ஓமகுண்ட விநாயகர் கோவில் உள்ளது.இந்தியாவிலேயே விசுவாமித்திரருக்கு தனியாக சிலை வைத்து வழிபாடு செய்யும் ஸ்தலமாக விஜயாபதி விளங்குவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016 தேர்தலின் போது கூட மனஅமைதி மற்றும் வெற்றி கிடைக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் இங்கு தங்கியிருந்து யாகம் வளர்த்தார் என்பது கொசுறு செய்தி.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu