தை மாத ராசி பலன்கள் 2021
மேஷம்
ராசிநாதன் செவ்வாய் ராசியில் அமர்ந்து அற்புதமான பலன்களை தர உள்ளார். இதுவரை உங்களால் முடியாத பல வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். நிறைவான வாழ்க்கை கிடைக்கும்.
ரிஷபம்
9 இல் புதன், குரு, சனி, சூரியன் வலுப்பெற்று இருப்பதால் உங்கள் திறமை முன்னேற்றம் அடையும்.எடுத்த காரியத்தில் வெற்றியும் கேட்ட உதவியும் கிடைக்கும்.நற்பலன்கள், சுக போகங்களை அடைவீர்கள்.
மிதுனம்
உங்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்றாலும் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது அவசியம்.
கடகம்
7 ஆம் இடத்தில் குரு, சனி, புதன், சூரியன் இருப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
சிம்மம்
உங்களுக்கு இந்த மாதம் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்கள் நடக்கும். சூரியன் 6 இல் இருப்பதால் நீங்கள் எதை செய்ய நினைத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
கன்னி
நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் சுலபமாக முடியும் அற்புதமான மாதம்.
துலாம்
பல நன்மைகள் உண்டாகும் என்றாலும் நீங்கள் அதிகம் முயன்றால் முன்னேற முடியும். அனைத்து விஷயங்களிலும் கவனத்துடன் செயல் பட வேண்டும். அலைச்சல் உண்டாகும்.
விருச்சிகம்
உங்களுக்கு பல அனுகூலம் உண்டாகும்.உறவினர்கள்,மற்றவர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். அதனை பெறுவதில் ஆர்வமும்,கவனமும் வேண்டும். அவர்கள் கொடுக்கும் நல்ல பலனை பெற்று கொள்ளவும்.
தனுசு
உங்களால் உங்களை நம்ப முடியாத முன்னேற்றத்தை தரக்கூடிய மாதம்.தனகாரகன் குரு தன ஸ்தானத்தில் அமர்வதால் பொருளாதார ரீதியாக நல்ல பலன் கிடைக்கும்.
மகரம்
அனைத்து வகைகளிலும் கவனமாகவும்,அலைச்சலும் கூடிய மாதம். எந்த விஷயத்தையும் உங்களின் உடல் உழைப்பை கொட்ட வேண்டும்.நிம்மதியாக சிறிது நேரம் கூட உட்கார முடியாத நிலை உண்டாகும்.
கும்பம்
சுற்றுலா,ஆன்மீகம், உத்யோகம்,தொழில் தொடர்பான பயணங்கள் அதிக அளவில் செய்ய வேண்டும். அதனால் உங்களின் சேமிப்பு கரையும்.
மீனம்
தாங்கள் மிக உன்னதமான பலன்களை பெற உள்ளீர்கள். உங்களின் ஜாதக நிலை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் நம்ப முடியாத அற்புத பலன்கள் பெறுவீர்கள்.
ஜோதிட ரத்னா டாக்டர் கோவிந்தராஜன்
9094292856.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu