மாஸ்டர்கார்டு நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை-ரிசர்வ் வங்கி

மாஸ்டர்கார்டு நிறுவனம்  புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை-ரிசர்வ் வங்கி
X
மாஸ்டர்கார்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது

இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது இந்திய வாடிக்கையாளர்களின் டேட்டா-வை இந்தியாவில் மட்டும் தான் சேமிக்க வேண்டும் என அரசு விதித்த உத்தரவை மாஸ்டர்கார்ட் நிறுவனம் பின்பற்றவில்லை என்பதால் ரிசர்வ் வங்கி மாஸ்ட்ர்கார்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் ஜூலை 22 ஆம் தேதி முதல் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை உத்தரவை விடுத்துள்ளது.

மாஸ்டர்கார்ட் நிறுவனத்திற்குப் போதிய அவகாசம், வாய்ப்புகள் கொடுத்த பின்பும் அரசு விதிகளை மதிக்காத காரணத்தால் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இதனால் வங்கிகளுக்கும், இந்தியாவில் மாஸ்டர்கார்ட் நிறுவனம் ஹெச்டிஎப்சி வங்கி, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஆர்பிஎல் வங்கி எனப் பல வங்கிகளிடம் கூட்டணி வைத்துள்ளது. இந்தத் தடை உத்தரவால் இனி வங்கிகள் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் அளிக்க முடியாது.

இந்தியாவின் மொத்த கார்டு பேமெண்ட் சேவையில் சுமார் 30 சதவீதம் மாஸ்டர்கார்ட் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள் படி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க மட்டுமே தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பழைய வாடிக்கையாளர்கள் எவ்விதமான பிரச்சனையுமின்றி டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த முடியும்.

ரிசர்வ் வங்கி இதுபோல் தடை விதிப்பது இது முதல் முறை அல்ல, மே 1 ஆம் தேதி அமெரிக்க எக்ஸ்பிரஸ், டைனர்ஸ் கிளப் போன்ற நிறுவனத்திற்கும் இதேபோன்ற கட்டுப்பாட்டை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்