அக்னி ரூபமாக இருக்கும் அம்மனுக்கு வியர்க்கும் அதிசயம்...

அக்னி ரூபமாக இருக்கும் அம்மனுக்கு வியர்க்கும் அதிசயம்
ஆன்மிகமும் மதமும் மோரும் வெண்ணெயையும் போன்றவை. மோரான மத்தை கடைந்து எடுத்தால் கிடைக்கும் வெண்ணெய் தான் ஆன்மிகம். துன்பங்களும் இன்பங்களும் எப்போதும் நம்மை சுற்றி, காற்றாய் இயங்குபவை தான். அதைக் கண்டு கவலைப்படாமல் கடவுளின் மீது நம்பிக்கை வைத்தால் போதும் என்பதற்கு எடுத்து காட்டாக திகழ்வது தான் நாம் பார்க்க போகும் இந்த ஆலயம்
நெல்லையில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது அச்சங்குட்டம் கிராமம் விவசாய பூமியான இந்த கிராமத்தில் சுமார் 2000கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள் அச்சங்குட்டம் கிராமம் 5 அண்ணன் தம்பிகளால் உருவாகி உள்ளது. ஒரு காலத்தில் ஆற்றில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது இதில் 5 குடும்பங்கள் மற்றும் உயிர் தப்பி உள்ளது அவர்கள் தப்பி வந்து உயிர் பிழைத்து நின்ற இடம் ஒரு குட்டம் இதில் 3 குடும்பம் தெற்காகவும் 2 பேர் குடும்பம் வடக்காகவும் குட்டம் பள்ளத்தில் நின்று விட்டனர் இதனை தொடர்ந்து அவர்கள் அங்கயே தங்களின் வாழ்க்கையை தொடங்கி விட்டனர் இன்று வரையிலும் இந்த கிராமத்தில் தெற்கு பகுதிக்கு முன்று பங்கும் வடக்கு பகுதிக்கு 2 பங்கும் என்று வரிகள் போடப்பட்டு வருகின்றது.
இக்கிராமத்தில் உள்ள காளி கோவில் அமைந்துள்ள இடங்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்துமலை ஐமீனின் கணக்கு பிள்ளைக்கு சொந்தமாக இருந்துள்ளது அவரிடம் வேலை பார்த்தவர்கள் தங்களை காப்பாற்ற தங்களுக்கு ஒரு தெய்வம் வேண்டும் என்று கருதி காளி அம்மனை மண்ணில் பிடித்து அம்மனுக்கு பனை ஒலையால் ஒரு குடில் அமைத்து புரட்டாசி மாதம் கொடை விழாவும் நடத்தி வழிபட்டு வந்தனர் ஒரு சமயம் அந்த பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட மாடக்கண்ணு என்பவரின் கணவில் தோன்றிய அம்மன் கோவில் முன்பு ஒரு இடத்தை காட்டி அங்கு கிணறு
தோண்டினால் எந்த கோடையிலும் வற்றாத தீர்த்தம் கிடைக்கும் என்று வாக்கு அளித்தார் அதனை தெடர்ந்து பெண்களே ஒன்று சேர்ந்து ஒரு கிணற்றை தோண்ட இன்று வரை எந்த கோடையானாலும் இந்த கிணற்றில் மட்டும் தண்ணீர் வற்றாமல் உள்ளதும் ஒரு அதிசயம்.
70 ஆண்டுகளுக்கு முன்பு குத்தாலிங்கம் என்ற பார்வையிழந்தவரின் கனவில் அம்மன் தோன்றி நான் சிலை வடிவில் பூமிக்கு அடியில் ஒர் இடத்தில் இருப்பதாகவும் அந்த இடத்தையும் காண்பித்து விட்டு மறைந்தாள், இது குறித்து அவர் ஊர்மக்களிடம் தெரிவிக்கும் போது யாரும் அவர் கூறுவதை நம்பவில்லை ஆனால் அவர் நண்பர் அய்யாதுரை மட்டும் நம்புகிறார், பின் குத்தாலிங்கமும் அய்யா துரையும் அம்மன் சொன்ன இடத்திற்கு சென்று மண்ணை தோண்டி பார்க்க 3 அடியில் ஒரு சிலை கிடைக்கிறது அதை அவர்கள் எடுத்து வந்தள்ளனர் பின்னர் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அம்மனுக்கு கோயில் கட்ட முடிவு செய்து 35 லட்சம் செலவில் மிக பிரம்மாண்டமாக கோயில் பணிகள் நடைபெற்று முடிந்து விட்டது சாந்த சொருபமாக அமைதியாக சிரித்த முகத்தோடு பக்தர்களுக்கு மகுடம் தரித்த காளியாக சூலம், குங்குமக் கிண்ணம், நாகம் புரளும் உடுக்கை, என சிம்ம வாகனத்தல் காட்சி கொடுக்கிறாள், சன்னதியில் ரத்தப்பலியோ பிராணிகளின் உயிர் பலியோ கிடையாது என்றால் மிகையாகாது..
அம்மன் அக்னி ரூபமாக இருப்பதால் அலங்காரம் செய்யும் போது அம்மன் சிலையில் வியர்க்கிறதாம் வியர்வையை துடைக்க துடைக்க அது வடிந்து கொண்டிருப்பது தான் அதிசயம், மேலும் அலங்காரம் செய்து முடித்த பிறகும் சிலையின் முகத்தில் வியர்வை வருவதும் முக்கிய அம்சமாகும் அம்மனுக்கு சைவ படையல் போடப்படுகின்றது, அப்படியே ஆடுகள் பலி கொடுக்கப்பட்டாலும் அம்மன் சன்னதி முன்புள்ள திரைகள் மறைக்கப்பட்டு தான் பலி கொடுக்கப்படுகின்றது, காளி சன்னதியின் இரண்டு பக்கமும் முத்தாரம்மன் மற்றும் மாரியம்மன் மண் வடிவில் இருக்கிறார்கள் காளியம்மன் அபிஷேகத்தின் போது மண் குவிய் வடிவில் இருக்கும் இரண்டு அம்மன் பீடங்கள் கரைவதும் சில தினங்களில் மீண்டும் அவை பழைய நிலைக்கு வளர்வதும் அதிசயமே அப்படி பல அதிசயங்கள் நிறைந்த கோயிலாக தான் அச்சங்குட்டம் காளியம்மன் கோவில் இருக்கின்றது.
இந்த காளி தேவியை நம்பி வந்து சன்னதியில் விழுந்து வணங்கும் போது கேட்ட வரங்களை அள்ளி தருபவளாகவும் கிராம மக்களுக்கு காவலாகவும் இருக்கின்றாள் என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர் இநத அம்மன் நம்மிடம் எப்போதும் எதிர் பார்ப்பது. கடவுள் மேல் ஒரு குன்றின் மணி அளவு கூட சந்தேகம் இல்லாமல்அவள் மீது ,நம்பிக்கை வைக்க வேண்டும். என்பது தான் அவள் நினைத்தால் எப்படிப்பட்ட சூழலையும் மாற்ற முடியும் என்பதை உணர வேண்டும். நம்முடைய சங்கடங்களைப் போக்கவும், சந்தோஷத்தை நிலைக்க வைக்கவும் கடவுள் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதை உணர வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu