சின்மயா மிஷன்அமைப்பைத் தொடங்கிய சுவாமி சின்மாயானந்தா...

சின்மயா மிஷன்அமைப்பைத் தொடங்கிய சுவாமி சின்மாயானந்தா...
X
Swami Chinmayananda, who started the Chinmaya Mission,

சின்மயா மிஷன்அமைப்பைத் தொடங்கிய சுவாமி சின்மாயானந்தா...

சின்மயா மிஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் உலகெங்கும் ஆன்மீக வேதாந்த கருத்துக்களை பரப்பிய சுவாமி சின்மாயானந்தா கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் பூதம்பள்ளி என்ற பெயரைக் கொண்ட ஊரில் ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தார். இயற்பெயர் பாலகிருஷ்ண மேனன். லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து வெளியேறி ஊடகவியல் துறையில் இந்திய அரசியல், பொருளாதார மற்றும் சமூகவியலில் பணிகளில் ஈடுபட்டார்.


இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்று பின்னர் நாஷ்னால் ஹெரால்ட் என்ற பத்திரிகையில் பணியாற்றி ரிசிகேஷம் சென்று சுவாமி சிவானந்தரைச் சந்தித்தார். அப்போது .ருந்துஅவர் இந்து சமய ஆன்மீகத்துறையில் அதிக அக்கறை கொண்டு சுவாமி சிவானந்தரினால் 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ம் நாள் சிவராத்திரி அன்று பாலகிருஷ்ண மேனன் சந்நியாச தீட்சை பெற்றுக்கொண்டு சுவாமி சின்மயானந்தா என்ற பெயரையும் பெற்று இமயமலையில் சுவாமி தபோவன மகாராஜ் என்பவரிடம் 8 ஆண்டுகள் இந்து தத்துவத்தைப் பயின்று சுவாமிகளின் ஆசியுடன் வேதாந்தத்தை உலகெங்கும் பரப்ப இமாலயத்தை விட்டு சின்மயானந்தர் புறப்பட்டார்.

உலகெங்கும் பல ஆசிரமங்களையும் மையங்களையும் ஆரம்பித்து பல பாடசாலைகளையும், மருத்துவ மனைகளையும் தொடங்கினார். கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென கிராம நலத் திட்டமான சின்மயா அமைப்பை உருவாக்கிய சுவாமி சின்மயானந்தா ஆகஸ்ட் 3ம் தேதி 1993-ல் சான்டியேகோ, கலிபோர்னியாவில் மறைந்தார். மகா சமாதி அடைந்ததாக சீடர்கள் கருதுகின்றனர்.

இவர் தொடங்கிய சின்மயா மிஷன் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ளது சுமார் 350 இடங்களில் இந்தியப் பண்பாடு, மற்றும் கலாச்சாரம், வேதாந்தம் போன்றவற்றை பரப்பி வருகிறது. மேலும் அத்வைத தத்துவத்தை பரப்ப இதுவரை 250க்கு மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil