அந்தந்த கிரகங்களுக்கு உரியது- எந்த உணவை எந்த கிழமைகளில் சாப்பிடுவது உகந்தது
ஒவ்வொரு கிழமைகளுக்கும் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கும் சம்பந்தம் உண்டாம். மேலும் எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன உண்ணலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிட்டால் அதிர்ஷ்டம் கூடும்!
உணவு நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்று.நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம்.ஆனால் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?
1. ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த நாள்.
கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,
சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,
மாதுளை ஜூஸ், கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.
2. திங்கள் — சந்திரன்-சந்திரனுக்கு திங்கள் என்கிற பெயரும் உண்டு
பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,மோர்.
பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பாம்.இட்லி.
தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.
3. செவ்வாய் — செவ்வாய்
துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,
பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,தர்பூசணி ஜூஸ்,
தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.மிளகாய் துவயல்.
4. புதன் — புதன் கிரகத்தின் முழு அனுகிரஹம் கிடைப்பதற்கு..
கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,
பாவக்காய் தொக்கு, முருங்கைக் காய் சூப்,
பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,
வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.
5. வியாழன் — குருவுக்கு உகந்த நாளான வியாழன்.
சுக்கு காபி,அல்லது கஷாயாம், கார்ன் சூப்,
கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,
தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,
சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,
கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,
மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.
6. வெள்ளி — சுக்கிரன்
பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,
தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,
முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,
இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை,
ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ் ,
கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,
நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.
7. சனி — சனி
ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம்,
சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல்,
எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம்,
மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,
புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,
நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,
பாதாம், முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.
இதில் கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும் அடிப்படை பொருட்களைப் பார்த்தால், அவை எல்லாமே அந்தந்த கிரகங்களுக்கு உரிய தானியங்களே...
நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு அற்புதமாக ஆன்மிகத்தையும், அறிவியலையும் தொடர்புபடுத்தி நமக்கு ஒரு அழகான, நலமான வாழ்வியல் முறையை அமைத்துகொடுத்துள்ளார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu