செஞ்சிலுவை தினம்...

செஞ்சிலுவை தினம்...
X
Red Cross Day

செஞ்சிலுவை தினம்


போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் உருவான அமைப்புதான் ரெட் கிராஸ். இதற்குக் காரணமானவர் ஹென்றி டுனான்டு. இவர் 1828ஆம் ஆண்டு மே 8 இல் பிறந்தார். முதன்முறையாக 1948ஆம் ஆண்டு மே 8 அன்று செஞ்சிலுவை தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் 1984ஆம் ஆண்டிலிருந்து செஞ்சிலுவை தினம் மற்றும் சிகப்பு பிறை நிலா தினமாக மே 8 இல் கொண்டாடப்படுகிறது.

முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்டது. செக்கோஸ்லவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922-ல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது. இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக அனுசரிக்கத் தூண்டுதலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil