திருப்பதியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கொரோனா நோயாளிகள் மட்டுமே உயிரிழப்பு

திருப்பதியில் உள்ள அரசு ரூயா மருத்துவ மனையில் செயல்படும் கொரோனா வார்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கொரோனா நோயாளிகள் மட்டுமே உயிரிழந்துள்ளனர் மேலும் 20 க்கும் மேற்பட்டவர்கள் கவலைகிடம் என மாவட்ட கலெக்டர் ஹரி நாராயணா பேட்டியின்போது தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் ரூயா அரசு மருத்துவமனை உள்ளது. ராயலசீமாவில் மிகப்பெரிய மருத்துவ மனையாக கருதப்படுவதால் இங்கு சிகிச்சை பெறுவதற்காக சித்தூர் மட்டுமன்றி நெல்லூர், கடப்பா, அனந்தபுரம் மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
இங்குள்ள கொரோனா வார்டில் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவ மனையில் நிலுவை இருந்த டேங்கரில் இருந்த ஆக்சிசன் சப்ளை செய்யப்படும் டேங்கரில் இருந்த ஆக்சிஜன் தீர்ந்து விட்டதால் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை.
இதனால் ஆபத்தான நிலையில் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் துடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் அதிடியாக கொரோனா வார்டுக்குள் நுழைந்து அங்கு சிகிச்சை பெற்று வரும் தங்கள் உறவினர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக பிராணவாயு கிடைக்காமல் துடிக்கும் உறவினர்களுக்கு பிராணவாயு கிடைக்க செய்ய கைகளில் கிடைத்த காகித அட்டை போன்றவற்றை பயன்படுத்தி விசிறி விட்டனர்.சுமார் 40 நிமிடத்திற்கு மேல் ஆக்சிஜன் கிடைக்காத நிலையில் 10 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இறந்து விட்டனர். மேலும் 20 க்கும் மேற்பட்டவர்கள்
ஆபத்தான நிலையில் உள்ளதால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 135 கொரோனா நோயாளிகளுக்கு ஐ.சி.யூ பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கண்முன்னே ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வந்த உறவினர்கள் துடிதுடித்து இறந்தது பார்த்த உறவினர்கள் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கியிருக்கும் அறையில் நுழைந்து தாக்க முயன்றனர். இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டனர்.
இதனால் உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடிகளை, மருந்துகளை உடைத்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதுகுறித்து தகவலறிந்த எஸ்.பி. வெங்கட அப்பல் நாயுடு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களை சமாதானப்படுத்தினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கலெக்டர் ஹரி நாராயணா ஆக்சிஜன் சப்ளை செய்யப்படும் டேங்கர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கலெக்டர் ஹரி நாராயணா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 11 பேர் ஐ.சி.யூ வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 30 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உறவினர்கள் எந்தவித பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு சென்னையில் இருந்து வரவேண்டிய ஆக்சிஜன் சிலிண்டர் சற்று காலதாமதமாக வந்தது. அதே நேரத்தில் நம்மிடம் இருந்த சிலிண்டர் வைத்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ( பிரஷர் ) அழுத்தம் குறைவாக இருந்த காரணத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே நேரத்தில் டேங்கர் லாரியும் சரியான நேரத்திற்கு வந்ததால் உடனடியாக ஆக்சிஜன் மீண்டும் செலுத்தப்படுவது தொடங்கியது. இதனால் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu