உழுபவனுக்கே நிலம் சொந்தம்-முதல் பழங்குடித் தலைவன் பிர்சா முண்டா நினைவு நாளின்று!😢
'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற கருத்தை முன்வைத்துப் போராடிய முதல் பழங்குடித் தலைவன் பிர்சா முண்டா நினைவு நாளின்று!😢
ஆங்கிலேயர்களிடமும் உள்நாட்டு நிலவுடமை தாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களை மீட்பதற்குப் போராடிய வீரன் பிர்சா முண்டா. சிறு வயதிலேயே பழங்குடிகளுக்குத் தலைமை வகித்துப் போராடிய அவர், மண்ணின் தந்தை (தர்த்தி அபா) என்று போற்றப்படுகிறார்.
ஆம்.. நம்மில் பலருக்கு சுதந்திரம் என்றாலே, காந்திஜியும், சுபாஷ் சந்திர போஸூ, பகத் சிங்-கும்தான் நினைவிற்கு வருவர். ஆனால் இவர்கள் வருவதற்கு முன்பே 19 வயது ஆன ஒருவர் ஆங்கிலேயரை நடுங்க வைத்துள்ளார். அவர் தான் மனித உரிமை மீட்பு போராளி பிர்சா முண்டா.
பள்ளிப் படிப்பின் போதே 'சர்தார்' கலவரத்தின் போது பிரிட்டிஷார்கள் எப்படியெல்லம் பழங்குடியினரை அடக்கியாண்டார்கள் என தெரிந்து கொண்டார்.
முன்னதாக தனது ஆசிரியரின் வார்த்தைகளை கேட்டு கிருத்துவ மதத்தில் மாறிய இவர் கிருத்துவ மதத்தில் உள்ள முரண்களை தெரிந்து கொண்டு தன் பிறப்பின் மதமான பழங்குடி மதத்திற்கே மீண்டும் வந்தடைந்தார்.
பின் அவர், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக முழு நேரமாகப் போராடினார். பின் தன் மக்களின் உழைப்பை சுரண்டும் நிலவுடையவர்களை எண்ணி கொதித்தெழுந்தார். இந்த சுரண்டல்களையும் எதிர்க்கவும் பழங்குடியினரைக் காக்கவும் `உல்குலான்' என்ற ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். தன் 19 வயதிலே தன் நில மக்களுக்காக சிந்தித்து செயல்பட்டார். இந்த போராட்டமே நில உரிமைகளை முதன்மையாக கொண்டதாக அமைந்தது. கூடவே பிரிட்டிஷார்கள் மற்றும் ஜமீன்தார்கள் ஆகியவர்களை வெளியேற்றுவதும் இதன் நோக்கமாக அமைந்திருந்தது.அப்போது பழங்குடியினர்கள் இவரது தலைமையில் கொரில்லா முறையில் போரிட்டு பல பிரிட்டிஷ் அரசாங்கப் போலீஸார்களைக் கொன்றனர்.
பின் 1894 ல் காட்டுவரியை ரத்துசெய்ய பிர்சா தலைமையில் போராட்டம் நடத்தினார். பின்னாளில் இவரின் போரட்டத்தின் சாரம் புரிந்து மற்ற நில பழங்குடியினர் இனத்தவர்களும் இவருடன் இணைந்துகொண்டனர்.இவரின் போராட்டம் பிரிட்டிஷாரை கொதித்தெழ வைத்தது. இதனால் பிர்சா இரண்டு வருடம் சிறைவைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்து ஓயாமல் தீவிரமாகப் போராடினார்.
இதனிடையே வெளியே உள்ள அழுக்கை சுத்தபடுத்துவதை காட்டிலும் நமக்குள் இருக்கும் குறைகளை சீர் செய்ய வேண்டும் என்று எண்ணி தன் இனக் குழுவிலேயே இருந்த மூடநம்பிக்கைகளுக்காகவும், பலி கொடுப்பது, குடிப்பழக்கத்திற்கு எதிராகவும் போராடினார் பிர்சா. அதேநேரத்தில் தங்களின் மதநம்பிக்கைகளையும் கலாசாரங்களையும் மறக்கக் கூடாது என வலியுறுத்தினார். கூடவே நிலம் மீதான உரிமையை கேட்கவேண்டிய அவசியத்தையும் உணர்த்தினார்.
ஆனால் 1900-ம் ஆண்டில் பிர்சா ஆதரவாளர்கள் மீது பிரிட்டிஷார்கள் பலரை பிரிட்டிஷார் சரமாரியாக சுட்டு நூற்றுக்கணக்கானோரைக் கொலைசெய்தனர். இதை அடுத்து சில மாதம் கழித்து கொரில்லா வீரர்களின் உதவிகொண்டு போராடிய இவரை ஆங்கிலேய அரசு கைது செய்தது கைதான பிர்சாவை பல சித்ரவதைகளை அளித்தனர். அதன் காரணமாக 25ஆவது வயதிலேயே இதே நாளில் (1900) சிறையிலேயே மரணமடைந்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu