இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி பிறந்தநாளின்று

இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி பிறந்தநாளின்று
X

இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி இன்று தனது 72 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி 1949 ஆம் ஆண்டு ஜூன் 09 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தார். இவர் 1972ஆம் ஆண்டு இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

இவர் டில்லி, கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். 1971 ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றார். 1993 இல் இவர் டில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றதோடு 1994 ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது விருது பெற ஏதுவாய் இருந்தது.

2007 ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார். 2011 இல் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015 இல் இணைந்தார். 2016 ஆம் ஆண்டு மே 29இல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்று, 16 பிப்ரவரி 2021 ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார்.

மேலும் மக்கள் மேம்பாட்டிற்காக 1987ஆம் ஆண்டு விஷண் பவுண்டேசன், நவ்ஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார். 1979ஆம் ஆண்டு காவல்துறை வீரப்பதக்கம், போதைப் பொருள் தடுப்பு பணிகளுக்கான நார்வே நாட்டு விருது , பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.மேலும் இவர் டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் ஏராளமான பரிசுகள், பதக்கங்களை வென்றுள்ளார்.

இவர் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். இவர் பல ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் மகத்தான சேவை ஆற்றியுள்ளார். 2016ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றார்.16 பிப்ரவரி 2021 ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார்.

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil