/* */

இயற்கை மணம் கமழும் நெல்லை அல்வா...

ஹனிமூன் அல்வா...

HIGHLIGHTS

இயற்கை மணம் கமழும் நெல்லை அல்வா...
X

நெல்லை பெயரை கேட்டவுடன் இனிக்கும் அல்வாவும், இரக்கம் அற்ற அரிவாளும் தான் நினைவிற்கு வரும், இந்த ஊரின் அல்வாவின் சுவையே தனிதான். நெல்லைக்கு வரும் வட மாநிலத்தவரும் அல்வா வாங்காமல் சொந்த ஊருக்கு திரும்ப மாட்டார்கள் என்பது நெல்லை மண்ணின் தனிச் சிறப்பு.

மதுரை மல்லிகை போல நெல்லை அல்வாவும் மிகவும் புகழ் பெற்றதாகும். கோதுமை, சர்க்கரை, நெய் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு தாமிரபரணி நீரினால் நல்ல சுவையளிக்கிறது. இங்குள்ள நெல்லையப்பர் கோயிலை சுற்றிலும் அல்வா கடைகள் நிறைந்து உள்ளன. இவைகளையும் தாண்டி புதிய சாதனை படைத்து வருவது தான் பொதிகை அல்வா நிறுவனத்தினரின் ஹனிமூன் அல்வா மற்றும் பாதாம் அல்வா.

நெல்லையப்பர் தேர் முன்பாக கீழ ரதவீதியில் அமைந்துள்ள அல்லவா கடைகளில், இருட்டு கடையும், அடுத்த படியாக ஸ்ரீகல்யாண்ஸ் பொதிகை அல்வாக்கடையும் அதிகம் வாடிக்கையாளர்களை கொண்டது..

இருட்டு கடை தொன்மையான மரபும் சுவையும் மாறாமல், அப்படியே இருப்பதால் இன்றும் வரிசையில் நின்று வாங்கும் அளவுக்கு ருசியில் அனைவரையும் ஈர்த்துள்ளது. பொதிகை அல்வாக்கடை நெல்லைக்கு புதிது தான், என்றாலும், தூத்துக்குடியில் உள்ள தேரடி பொதிகை அல்வா கடை அரை நூற்றாண்டை கடந்த பெருமை கொண்டது.

தாமிரபரணி நீரில் இங்கு அல்வா தயாரிக்கும் பல கடைகள் உள்ள நிலையில் பாபநாசத்தில் இருந்து நேரடியாக பொதிகை நீரினை பஞ்சபாத்திரத்தில் கொண்டு வரச் செய்து அதன் மூலம் இந்நிறுவனத்தினர் தயாரிக்கும் அல்வாக்களின் பெயரே நாக்கில் நீர் ஊறச் செய்வது உண்மை.

(திரு)நெல்வேலி(மண) மக்களை கவரும் ஹனிமூன் டேட்ஸ், மூலிகை நீரினை அடிப்படையாக கொண்ட பொதிகை, மூதியோர்களையும் இழுக்கும் முந்திரி, பார்த்தவுடன் ருசிக்க தூண்டும் பாதாம், ஆடவரை அசத்தும் அத்திப்பழ அல்வா, மாணவர்களை கவர்ந்திடும் மஸ்கட், பல் இல்லா பாலகர்கள் சுவைத்திட பால் அல்வா,நெஞசம் இனிக்கும் நெய் அல்வா என அல்வாவிற்கு என தனிக் கடை சாம்ராஜ்யமே நடத்துவதை பொதிகை அல்வா கடையில் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படுவதை பார்த்தே புரிந்து கொள்ளலாம்.

பாவ சாபம் நீக்கும் பாபநாசத்தில் எழில் கொஞ்சும் பொதிகையில், உருவாகும் புண்ணிய நதியாம் தாமிரபரணியின் தூய நீரினை சுத்தமான முறையில் சேகரித்து அங்கேயே (பாபநாசத்தில் உள்ள சிவாலயத்தின் அருகில்) அல்வா வகைகளை உருவாக்குவது அல்வா மாளிகை என வாடிக்கையாளர்களால் வர்ணிக்கப்படும் பொதிகை அல்வா கடையின் தனிச் சிறப்பாகும்.

மேலும் இவர்களது தயாரிப்பில் பஞ்ச மூலிகைகளான அருகம்புல் ,துளசி ,வில்வம்,பொன்னாங்கன்னி,வல்லாரை ஆகியவைகளையும் சேர்த்து உருவாக்குவதால் பொதிகை அல்வாவில் மருத்துவ குணமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 9 May 2021 4:14 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்