/* */

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு நாளின்று

பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

HIGHLIGHTS

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு நாளின்று
X

முத்துலட்சுமி ரெட்டி 

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைந்த முத்துலட்சுமி ரெட்டி காலமான நாளின்று!

பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் அவ்வை இல்லம், புற்று நோய்க்கு உயர்தர சிசிக்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை அமைத்தவர்.

அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. அரசின் உதவித்தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் பெண். சட்டசபையில் அங்கம்வகித்த முதல் பெண். இப்படிப் பல நிகழ்வுகளில் முதல்பெண் மணியாகத் திகழ்ந்தவர் முத்துலட்சுமி ரெட்டி-மேலும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவும் வாழ்ந்தவர் இவர் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைய முத்துலட்சுமி ரெட்டி பெற்ற வேதனைகளும், சோதனைகளும் எக்கச்சக்கம்!


ஆம்..அக் குழந்தை பிறக்கும்போதே ஆரோக்கியம் இல்லாமல் பிறந்தது. ஆனாலும், அந்தப் பெண் குழந்தைக்கு அதன் அம்மா தாய்ப்பால் ஊட்டவில்லை. எப்போதும் கடுமையான வயிற்றுப்போக்கு இருந்தது அந்தக் குழந்தைக்கு. அதனால் மெலிந்து நோஞ்சானாகவே இருந்தது. இதோடு கடுமையான சளியும் சேர்ந்துகொண்டது. பள்ளியில் படிக்கும்போது கிட்டப்பார்வை ஏற்பட்டு கண்ணாடி அணியும் அவசியம் அந்தப் பெண்ணுக்கு வந்தது. இந்தத் துன்பத்துடன்தான் மெட்ரிகுலேஷன் படித்தார்.

அடுத்து இன்டர்மீடியேட் போனார். உடல் ஒத்துழைக்கவில்லை. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டார். மருத்துவம் படிக்கப் போனார். அப்போது ஆஸ்துமா ஏற்பட்டது. பல இரவுகளில் மூச்சு முட்டி அவரால் தூங்க முடியாது. மோசமான இழுப்பு ஏற்பட்டு செத்துச் செத்துப் பிழைத்தார். ஆஸ்துமாவில் இருந்து மீளவே முடியவில்லை. அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகியது. மூத்த மகன் பிறந்தான்அந்தப் பையனுக்கு கக்குவான் இருமல் பாதிப்பு அதிகம் இருந்தது.

அவனைப் பெற்று எடுப்பதே இந்தப் பெண்ணுக்குச் சிரமமாக இருந்தது. குழந்தைக்கும் தாயிடம் இருந்து பால் குடிக்கும் சக்தி இல்லை. வலிப்பு நோயும் இருந்தது. இரண்டாவது குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தது. பிறந்த குழந்தையின் கண்ணைக் கழுவும்போது, பயன்படுத்தக் கூடாத திரவத்தைப் பயன்படுத்திவிட்டார்கள். ஆகையால், அந்தக் குழந்தையின் கண் திடீரென வீங்கிவிட்டது. அதைக் குணப்படுத்தினார்கள். அந்தக் குழந்தைக்குப் பால் கொடுக்கும் அளவுக்கு இந்தப் பெண்ணுக்கு பால் வளம் இல்லை. எனவே குடல் மந்தமும், மலச்சிக்கலும் இரண்டாவது குழந்தைக்கு ஏற்பட்டது. எடைகூடவே இல்லை.

இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, முதல் குழந்தைக்கு காய்ச்சல் வந்து, அது வலிப்பாக வளர்ந்தது. நினைவாற்றலும் போனது. தீவிரச் சிகிச்சைக்குப் பின் அந்தக் குழந்தைக்கு நினைவு திரும்பியது. இந்தச் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டதால் இரண்டாவது குழந்தையின் ஆரோக்கியமும் கெட்டது. ''மூத்தவனைப் பார்ப்பதால் எனது பால் மாறுதல் அடைந்தது. குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது தாய்க்கு அந்தச் சமயத்தில் ஏதேனும் கவலையோ, வருத்தமோ ஏற்பட்டால் அவளிடம் ஊறும் பாலில் சிறு மாறுதல்கள் உண்டாகின்றன'' என்று அந்தப் பெண் பிற்காலத்தில் எழுதினார்.

அந்தப் பெண்ணின் முதல் தங்கையும் சிறு வயதில் அம்மை நோயின் பாதிப்புக்கு உள்ளானவர். தொடர் வயிற்றுப்போக்கு அவரது உடல்நலத்தைக் கெடுத்தது. இரண்டாவது தங்கை, திருமணம் செய்து வைத்த சில ஆண்டுகளில் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார். ''மனிதனை ஆட்டிப் படைக்கும் இந்தப் பயங்கரமான வியாதிக்குத் தீர்வு தேடுவதில் அன்றில் இருந்து முனைப்பானேன்'' என்று சபதம் எடுத்தார் அந்தப் பெண்.

அன்றைய நீதிக் கட்சி ஆட்சியின் சுகாதார அமைச்சராக இருந்த பனகல் ராஜா இவரை இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க உதவிகள் செய்தார். பெண்களை, குழந்தைகளைப் பாதிக்கும் வியாதிகள் பற்றி படித்தார். ''குழந்தைப் பருவம் முதல் எனது வாழ்க்கையில் நான் ஆரோக்கியமாக இருந்ததே இல்லை" என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்ட அந்தப் பெண்தான்... மருத்துவம் படித்த முதல் இந்தியப் பெண்.

சென்னை மாகாணச் சட்டசபையில் பங்குபெற்ற முதல் பெண். புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களின் புனித நம்பிக்கையாக இருக்கும் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தை உருவாக்கியவர். அபலைப் பெண்களின் வாழ்க்கைக்கு அடைக்கலமாக ஓர் இல்லம் வேண்டும் என்று 'அவ்வை இல்லம்' தொடங்கியவர். அவர்தான், 'ஒரு தெய்வம் நேரில் வந்தது' என்று சொல்லத்தக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்.

மனிதகுலத்துக்குச் சேவை செய்ய கட்சி நடத்த வேண்டுமா? டாக்டர் முத்துலட்சுமி எந்தக் கட்சியும் நடத்தவில்லை. ஊருக்கு உழைக்க உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளானவர். நான்கு பேருக்கு நல்லது செய்ய பணபலம் படைத்தவராக இருக்க வேண்டுமா? தனக்கும் தனது கணவருக்கும் கிடைத்த சொற்ப ஊதியத்தை வைத்தே சிறுசிறு காரியங்களைத் தொடர்ந்தார்.

சமூகத்துக்காக உழைக்க நினைப்பவர்கள் சொந்த பந்தங்களை உதறிவிட்டு குடும்பத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டுமா? தன்னுடைய பெற்றோர், கணவன், இரண்டு குழந்தைகள், இரண்டு தங்கைகள், ஒரு தம்பி, உறவுத் தங்கையின் குடும்பம்... மொத்தப் பேருக்கும் மையமாக இருந்துகொண்டே சமூக சேவையிலும் இறங்கினார்.

தான் வேலை பார்த்துக்கொண்டே தங்கை நல்லமுத்துவை படிக்க வைத்தார். அவர்தான் பிற்காலத்தில் ராணிமேரிக் கல்லூரியின் முதல் இந்தியப் பெண் முதல்வர் ஆனார். அரசியலுக்கு வந்தால் தனது தொழிலை மறந்துவிடவேண்டுமா? 'மாட்டேன், அரசியலுக்காக எனது மருத்துவத் தொழிலையும் மருத்துவ ஆராய்ச்சியையும் விட்டுவிட மாட்டேன்' என்று சொன்னவர் அவர்.

முத்துலட்சுமி பிறந்து வளர்ந்த காலம், வீட்டுக்குள் மட்டும்தான் பெண்ணைப் பார்க்க முடியும் என்ற காலம். வீட்டுப் படியைத் தாண்டினால் திரும்பிய பக்கம் எல்லாம் ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். சென்னை மருத்துவக் கல்லூரி ஆண்களால் நிரம்பி இருந்தது. இருந்த பெண்களும் ஐரோப்பியர்களாக இருப்பார்கள். 'திரை போட்டு மூடிய வாகனத்தில் நான் போவேன்' என்றார் முத்துலட்சுமி.

அந்தக் காலத்தில் படிக்கச் செல்லும் பெண்களைத் தெருவில் நின்று கிண்டல் செய்வார்களாம். கல்லூரிப் பேராசிரியர் கர்னல் ஜிப்போர்டு, தனது வகுப்பில் மாணவிகளை உட்காரவே விட மாட்டார். அறுவைச் சிகிச்சை பாடத்தில் முழு மதிப்பெண்ணை முத்துலட்சுமி பெற்ற பிறகுதான் பெண்களும் தனது வகுப்புக்குள் வரலாம், உட்காரலாம் என்று மனம் மாறி இருக்கிறார். முத்துலட்சுமி மருத்துவப் பட்டம் பெற்றபோது, 'சென்னை மருத்துவக் கல்லூரியின் வரலாற்றில் இது பொன்னான நாள்' என்று எழுதினார் கர்னல் ஜிப்போர்டு. எழும்பூர் மருத்துவ மனையில் அதுவரை பெண் மருத்துவரே இல்லை. முதல் பெண் மருத்துவராக முத்துலட்சுமி உள்ளே நுழைந்தார்.

மருத்துவ உயர்படிப்புக்கு பாரீஸ் சென்றவருக்கு அந்தத் துறையோடு சமூக சேவையும் சீர்திருத்தமும் சேர்த்துப் பார்க்கும் சிந்தனை ஏற்பட்டது. இதில் மிக முக்கியமானது தேவதாசி முறை ஒழிப்பு. அது குறித்து ஜூலை 30ல் (அவர் பர்த் டே) அன்னிக்கு விரிவா பார்ப்போம்.

Updated On: 22 July 2021 4:31 AM GMT

Related News