கணவரின் காதல் கவிதைகள்..
Kanavan Patriya Kavithaigal
Kanavan Patriya Kavithaigal
உந்தன் நெற்றி மீது
ஒற்றை முத்தமிட்டு
எனக்கானவன் நீதான் என
முத்திரை பதித்திட ஆசையடா.
மயிலிறகாய் என் மனம் வருடி மலர்கின்றாய், என் மன்னவனே!
பகல் நிலவாய் என் பாதையில் ஒளிர்கின்றாய் என்னவனே!
நிழற்குடையாய் நீ நிற்க ஏங்குகிறேன் என்னுயிரே!
நகல் படமாய் நானிருக்க நேரமென்ன மாயவனே?
--
நெற்றியில் இருக்கும் சிவப்புபொட்டு
நீ என் பெண்மைக்கு கொடுத்த பரிசல்லவோ!
கணவனே என் ஆருயிர் காதலனே!
**
அழகான நினைவு நீ! அன்றலர்ந்த நிலவு நீ!
கலையாத கனவு நீ! என்னை கொள்ளையடித்த களவு நீ!
புரியாத உணர்வும் நீ! பிரியாத உறவும் நீ!
எல்லாமும் நீயே! எல்லாவற்றிலும் நீயே!
உன் முகம் பார்த்து விட்டால் போதும்,
பல யுகங்களை கூட சுகங்களாக கழித்திடுவேன்.
வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து.
**
முகம் பார்த்து வந்த காதல்
மறைந்து விடும்.
பணம் பார்த்து வந்த காதல்
பறந்து விடும்.
உள்ளம் பார்த்து வந்த காதல்
உயிர் உள்ள வரை தொடர்ந்து வரும்.
**
மானும் மீனும் வாழும் கண்ணில்
என்னை வைத்தாய்.
தேனும் பாலும் ஊறும் சொல்லில்
அன்பை வைத்தாய்.
ஊனும் உயிரும் எல்லாம் எந்தன்
உறவில் வைத்தாய்.
ஈர் உயிரை ஓர் உயிராக்கி
புத்துயிர் தந்தாய்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu