ஏ.ஆர் ரஹ்மானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி விவகார வழக்கு தள்ளுபடி

ஏ.ஆர் ரஹ்மானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி விவகார வழக்கு தள்ளுபடி
X
ஏ.ஆர் ரஹ்மானை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தியதில் லாபம் ஈட்டவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு-எந்த விளக்கமும் நீதிமன்றத்திற்கு அளிக்காத நிலையில் வழக்கு தள்ளுபடி

ஏ.ஆர் ரஹ்மானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி விவகார வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தியதில் எதிர்பார்த்த அளவு லாபம் ஈட்டவில்லை என ஏற்பாட்டாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடத்திருந்தார்- எந்த விளக்கமும் நீதிமன்றத்திற்கு அளிக்காத நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 2000 ம் ஆண்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தியதில் எதிர்பார்த்த அளவு லாபம் ஈட்டவில்லை என கூறி சென்னையைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் மீதான இன்றைய விசாரணையில், நிகழ்ச்சி லாபகரமாக இல்லை என்பதற்கு தான் பொறுப்பில்லை என்றும் தனக்கு பேசப்பட்ட தொகையை கூட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வழங்கவில்லை என்றும் ஏ.ஆர் ர ஹ் மான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு தொடர்பாக தொடர்பாக மனுதாரர் எந்த விளக்கமும் நீதிமன்றத்திற்கு அளிக்காத நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் அறிவிச்சுப்புட்டார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!