ஓசோன் படலம் அழியாமலிருக்க தடுப்பது எப்படி?

Oson Padalam-பூமியைச் சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்து பாதுகாப்பது ஓசோன் படலம் ஆகும். ஓசோன் என்பது ஆக்சிஜன், ஹைட்ரஜன், போ்ன்ற ஒரு வாயு ஆகும். இந்த ஓசோன் வாயுவானது ஒரு பாதுகாப்பு குடை போன்று பூமிக்கு 15 முதல் 55 கிலோ மீட்டர் (மேலாக) இருந்தும் சூரியனுடைய புற ஊதாக்கதிர்வீச்சில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களையும் பாதுகாக்கிறது.
ஓசோன்படலம் பாதிப்பு எப்படி?
மனிதன் கண்டுபிடித்த பல்வேறு வகையான கண்டுபிடிப்புகள் மக்களுக்கு ஒரு விதத்தில் நன்மை அளித்தாலும், மறுபுறத்தில் சில தீமைகளையும், உண்டாக்குகிறது. இவ்வாறு பூமியில் நிகழக்கூடிய அனைத்து நிகழ்வுகளுமே ஓசோன் படலத்தினை ஏதாவது ஓரு சிறு அளவிலாவது பாதிப்பினை ஏற்படுத்துவதை நம்மால் மறுக்க முடியாது. இன்றைய கால கட்டத்தில் வாகனங்கள் வெளிவிடும் நச்சுப்புகை , தொழிற்சாலை பாய்லர்களில் இருந்து வெளிவிடும் நச்சுப்புகை, ஏ.சி, பிரிட்ஜ், கூலர் இவைகளிலிருந்து வெளியேறக்கூடிய வாயுக்கள் மற்றும் அணுகுண்டுகள் ,ஏவுகணைகள், யாவுமே ஓசோன் படலத்தினைப் பெருமளவில் பாதித்துவருகிறது. ஓசோன் தட்டுப்பாடு, அமில மழை, தீய நச்சுத்தன்மை கொண்ட கழிவுப் பொருள்கள், பச்சை இருப்பிட விளைவு ஆகியன யாவுமே மனிதர்களுக்கு அனுதினமும் அச்சத்தினை ஏற்படுத்தி வருகின்றன.
குளோரோஃப்ளூரோ கார்பன்
குளோரோஃப்ளூரோ கார்பன் ஓசோனைப் பெருமளவில் பாதிக்ககூடிய காரணியாக விளங்குகிறது.சிஎப்சியின் ஒரு மூலக்கூறு, ஒரு லட்சம் ஓசோன் மூலக்கூறுகளைப் பாதிப்படைய செய்ய முடியும்.இந்த சிஎப்ஸி யானது நவீன காலத்தில் நாகரிக வாழ்விற்கு அச்சாணியாக விளங்ககூடிய பொருள்களான டி.வி,பிரிட்ஜ், ஏ.சி, உறைய வைக்கும் கருவிகள், காற்றுக்கட்டுப்பாட்டுகருவிகள், மின் கம்பியினைச் சுற்றியுள்ள உறைகள், கரைப்பான்கள், எலக்ட்ரானிக் கருவிகள் ஆகியவற்றில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. தீயணைப்புக்கருவிகளில் பயன்படுத்தப்படும் சிஎப்சியை ஹாலோன் என்கிறோம். குளோரோஃப்ளூரோ கார்பனின் தேவைகள் அதிகரித்து கொண்டே இருப்பதினால் ஓசோன் படலத்தின் அழிவுக்கான நாட்கள் வெகுதுாரத்தில் இல்லையென அறிவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஓசோன் படலம் அழிந்தால்?
ஆங்கிலேய நாட்டு ஆய்வாளர்கள், ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் ஓசோன் அடுக்கில் ஓட்டை இருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர். ஓசோன் படலம் அழிக்கப்படுவதினால் மனிதனுக்கு பல்வேறுபட்ட பெயர் சொல்ல முடியாத தோல் நோய்கள் உண்டாகும். சருமப்புற நோய்களும் , கண்களில் புரை நோய்களும் அதிக அளவில் உண்டாகும். சிஎப்சி அதிகரிக்கும்போது, உலகில் வெப்பம் அதிகரித்து செயற்கை பொருட்கள், சாயங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பிவிசி ஆகியவை அழிந்து விடும். வெப்பம் அதிகமாகும்போது தட்ப வெப்ப நிலை மாற்றம் ஏற்படும். இதனால் கடலினுடைய நீர் மட்டம் அதிகரிக்கும். இயற்கை சீற்றங்கள், புயல் காற்று, பனிமழை, வெள்ளம்,வறட்சி, என பல்வேறு பட்ட வகைகளில் பாதிப்புகள் ஏற்படலாம்.
நாம் அனுதினமும் சுவாசிக்க கூடிய காற்றிலுள்ள வாயுக்களின் இயைபுகளான நைட்ரஜன் 78%,ஆக்சிஜன் 21%,கரியமிலவாயு 0.03%.ஆர்கான் 0.9%. ஆகியவை இன்றைய நிலையில் இதே நிலையில் நீடிக்கிறதா? எனும் சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுகிறது. உலக சுற்றுப்புற சூழ்நிலை தினத்தை வருடந்தோறும் கொண்டாடுவது பெரிய விஷயமல்ல. அதனை உலகில் உள்ளோர் அனைவரும் கடைப்பிடித்தால் நிச்சயமாக ஓரளவுக்கு ஓசோன் படலம் பாதிப்பிலிருந்து மீள முடியும்.
பாதுகாப்பு நிறுவனம்
ஓசோன் படலத்தை அழிவில் இருந்து மீட்கப்படவேண்டும் என்றால் நிச்சயமாக உலகம் முழுவதும் ஓசோன் பாதுகாப்பு நிறுவனம்அமைக்க வேண்டும். ஓசோனைப் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும். சிஎப்சிக்கு பதிலாக பாதிப்பில்லாத மாற்றுப்பொருள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். ஓசோன் அடுக்கினை நல்ல முறையில் பாதுகாக்கும் நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் அனைத்து நாடுகளும், மேற்கொள்ளவேண்டும். சிஎப்சியை அதிக அளவில் உபயோகிக்கும் நாடுகளுக்கான வரிகள் விதிக்கப்பட வேண்டும். மக்களுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சமூகத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எளிமையான கண்டு பிடிப்புகளுக்கு அந்தந்த நாடுகள் ஊக்கப்படுத்துதல் வேண்டும்.
புதியதோர் உலகம் செய்வோம்
புரட்சிக்கவி பாரதிதாசன் பாடியது இவ்வாறு உலகினை பாதிக்கும் நிகழ்வுகளுக்கல்ல.அனைத்துதுறைகளிலும் நல்ல வளர்ச்சியை பெறவேண்டும் என அவர் பாடினார். அதைவிடுத்து, மாசுபட்ட உலகிலும், மூச்சைத்திணற வைக்கும் முன்னேற்றமான உலகிலும், அதிக வெப்பமான இவ்வுலகில் வாழ்வதால் நமக்கு பலவிளைவுகள் உண்டாகின்றன. இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும், நிம்மதியுடன் வாழ துாய காற்று முக்கியமானது.அதனைப்பெறுவதற்கு மரங்கள், பசுமையான செடிகளும் வளர்க்கப்படவேண்டும். இருக்கும் காடுகளை அழிக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே பூமியில் வாழும் நாம் அந்த பூமிக்கு செய்யும் மாற்றுக் கடனாக சுற்றுப்புறத்தை பாதிக்க கூடிய காரணிகளை முழுவதுமாக தவிர்த்து ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முடிந்தவரை எளிமையாக வாழ்ந்தோமானால் நிச்சயம் ஓசோன் படலத்திற்கு பாதிப்பில்லை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu