ஆதார் அட்டை மற்றும் பான் கார்டுகளை எவ்வாறு இணைக்கலாம் - அதற்கான கடைசி தேதி மார்ச் 30

ஆதார் அட்டை மற்றும் பான் கார்டுகளை எவ்வாறு இணைக்கலாம் - அதற்கான கடைசி தேதி மார்ச் 30
X
உங்கள் பான் ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால்,உங்கள் பான் கார்டு செயல்படாது.வங்கி பரிவர்த்தனைகளில் சிரமத்தை சந்திப்பீர்கள்

ஆதார் அட்டை மற்றும் பான் கார்டுகளை எவ்வாறு இணைக்கலாம், ஆதார்-பான் இணைப்பு காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக அந்த அறிவிப்பு மார்ச் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு இணைக்கா விட்டால் பல சேவைகள் உங்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இதனை தவிர்க்க 12 இலக்க ஆதார் எண்ணை உங்கள் பான் அட்டையுடன் இணைக்க வேண்டும்.

உங்கள் பான் ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் கார்டு செயல்படாது. உங்கள் பான் செயல்படவில்லை என்றால், நீங்கள் வங்கி பரிவர்த்தனைகளில் சிரமத்தை சந்திப்பீர்கள். அதாவது ஓய்வூதியம், உதவித்தொகை மற்றும் எல்பிஜி மானியம் போன்ற திட்டங்களுக்கு ஒரு முக்கிய ஆவணமாக பான் உள்ளது. உங்கள் ஆதார் மற்றும் பான் ஆகியவற்றை பல வழிகளில் இணைக்கலாம்.

பான்-ஆதார் இணைப்பை ஆன்லைனில் செய்யலாம்.https://incometaxindia.gov.in/Pages/default.aspx என்ற இணையதளம் மூலமாக இதனை சுலபமாக செய்யலாம். அதன் பின்னர் Important Links என்ற Optionயை கிளிக் செய்ய வேண்டும். ஆதார்-பான் இணைப்பிற்கான Go To E-filing website for PAN-Aadhaar Linkage என்ற Optionயை கிளிக் செய்ய வேண்டும். மேலும் SMS வழியாகவும் ஆதார் – பான் இணைப்பு செய்யலாம். நீங்கள் 567678 அல்லது 56161 க்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். வருமான வரி இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் பான்-ஆதார் இணைப்பு நிலையை நீங்கள் சரிபார்க்கலாம். அல்லது நீங்கள் எஸ்எம்எஸ் மூலமாகவும் நிலையை சரிபார்க்கலாம்.

நீங்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணில் இருந்து 12 இலக்க ஆதார் எண் மற்றும் 10 இலக்க பான் எண்ணை தட்டச்சு செய்து 567678 அல்லது 56161 எண்ணிற்கு SMS அனுப்ப வேண்டும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!