இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்
X

பைல் படம்.

இன்று அதிகாலை 01.55 மணி வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று காலை 09.02 மணி வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

சோபகிருது வருடம் வைகாசி மாதம் 02 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 16.5.2023. சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.55 மணி வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று காலை 09.02 மணி வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்:

வீண் அலைச்சலால் பொருள் விரையம் ஏற்படுத்துவீர்கள். உடன் வேலை செய்பவர்களால் டென்ஷன் அடைவீர்கள். மனநிலை புரியாமல் குடும்பத்தினர் குத்தலாகப் பேசுவதால் வேதனைப்படுவீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். வண்டி வாகனங்கள் இடைவழியில் மக்கர் பண்ணுவதால் பங்க்சுவாலிட்டி இல்லாமல் சிரமப்படுவீர்கள்.

ரிஷபம்:

கட்டுமானத் தொழிலை கன ஜோராக நடத்துவீர்கள். வியாபாரத்தில் வெற்றிகரமான உத்திகளைக் கையாளுவீர்கள்‌. அலைச்சல் அதிகமானாலும் தொழிலுக்குத் தேவையான ஆர்டர்களைப் பெற்று வருவீர்கள். மனத் தைரியமும் தன்னம்பிக்கையும் அடைவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பதால் நிலத்தில் தைரியமாக பணத்தை முதலீடு செய்வீர்கள்.

மிதுனம்:

நினைத்த காரியத்தை நடத்திக் காட்டுவீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி பண்ண கடுமையாக உழைப்பீர்கள். சொந்தத்தில் திருமணம் பேசி முடிப்பீர்கள். அரசுப் பணியில் நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு பெறுவீர்கள். தனியார் துறையிலும் சம்பள உயர்வு அடைவீர்கள். வியாபாரம் சிறப்பாக நடந்து முன்னேற்றம் காண்பீர்கள்.

கடகம்:

நில விற்பனை மூலம் பணவரவை அதிகப்படுத்துவீர்கள். மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்குவீர்கள். இல்லறத்தில் கசப்புணர்வை போக்குவீர்கள். காதலியின் மனமறிந்து நடந்து கொள்வீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்:

அடுத்தவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள். உடன் வேலை செய்பவர்கள் கொடுக்கும் தொல்லையால் மன வேதனைப் படுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற முடியாமல் சிரமப்படுவீர்கள். சின்ன சின்ன விபத்துகளில் சிக்கிவீர்கள். சந்திராஷ்டம நாள் என்பதால் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள்.

கன்னி:

கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி ஒற்றுமையை பலப்படுத்துவீர்கள். புது வியாபாரம் தொடர்பான காரியங்களை சாதகமாக முடிப்பீர்கள். உறவினர்களிடம் அனுசரித்துப் போவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். பிள்ளைகளின் படிப்புக்காக வெளியூர்ப் பயணம் செல்வீர்கள்.

துலாம்:

வியாபாரத்திற்கு இடையூறு செய்பவர்களை அடையாளம் காண்பீர்கள். புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள். பங்குப் பரிவர்த்தனை வியாபாரம் மந்த நிலையில் இருப்பதால் எச்சரிக்கையாக முதலீடு செய்வீர்கள். தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக் கொள்வீர்கள். பணம் கொடுக்கும்போது பத்திரத்தில் கையெழுத்து வாங்க மறக்காதீர்கள்.

விருச்சிகம்:

வியாபாரத்துக்கு உதவியான நல்ல செய்தி வெளிநாட்டிலிருந்து பெறுவீர்கள். வேலை காரணமாக சில நாட்கள் வெளியூரில் தங்குவீர்கள். கலைத்துறையினர் புதிய சாதனை படைப்பீர்கள். புதிய காண்ட்ராக்ட்களை பெறுவீர்கள். அடுத்தவருக்காக உத்தரவாதம் கொடுக்காதீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரித்தாலும் பணம் தங்காமல் ஏமாற்றம் அடைவீர்கள்.

தனுசு:

பிடிவாதமாக நின்று நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். தாய் வழி சொத்தில் உங்களுக்கு உரிய பங்கை அடைவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் இரு மடங்கு லாபம் பார்ப்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்திற்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வீர்கள். சில்லரை வியாபாரிகள் கணிசமான பண வரவை காண்பீர்கள்.

மகரம்:

உங்களை மட்டம் தட்ட நினைப்போருக்கு நல்ல பாடம் புகட்டுவீர்கள். துணிச்சலுடன் எந்தக் காரியத்திலும் இறங்குவீர்கள். புதிய ஆர்டர்கள் மூலம் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். குடும்பம் பற்றிய கவலைகளை மறப்பீர்கள். நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் இறுதியாக அவற்றை உங்களுக்குச் சாதகமாக்கி வெற்றிக்கொடி நாட்டுவீர்கள்

கும்பம்:

வங்கியில் எதிர்பார்த்த லோனை உரிய நேரத்தில் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட மிஷின்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வீர்கள். நண்பர்களுடன் இருந்த சண்டையைப் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். மனையிடம் வாங்கி பத்திரப் பதிவு செய்வீர்கள். எதிலும் நிதானமாகச் செயல்படுவீர்கள்.

மீனம்:

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த வேலையும் செய்யாதீர்கள். தொழிலில் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க தவறாதீர்கள். வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். உறவினர்களால் சிக்கலை சந்திப்பீர்கள். முழங்கால் வலியால் சிரமப்படுவீர்கள். வெளியூர் பயணங்களில் வேலைச் சுமை அதிகரித்து மனச்சோர்வு அடைவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!